________________
170 கருணாநிதி நாடாளும் ஆச்சாரியார் சொல்லுகிறார், நம்மை யெல் லாம் நசுக்கவேண்டுமென்று ! அவர் பக்தகோடிகளும் அதையே சொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள் பக்தி சிரத்தையோடு பின்பற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு என்ன சொல்லுகிறார் என்று பாருங்கள். சிறைச்சாலை யிலே ஒரு புத்தகம் எழுதுகிறார் பண்டிதர். அதன் பெயர் உலக சரித்திரம். அதிலே ஒரு பகுதியைக் குறிப்பிடு கிறேன் - கவனியுங்கள். இந்தியாவில் அக்பர், ஆட்சி நடத்துகிறார். அவர் எம்மதத்தையும் விரோதித்துக் கொள்ளாமல் ராஜ்ய பரி பாலனம் புரிகிறார். அப்போது அவரை தமது மதத்தில் சேர்ப்பதற்காக ஏசு சங்கப் பாதிரிகள் வருகிறார்கள். அவர் களை அக்பர் சில கேள்விகள் கேட்டு மடக்கிவிடுகிறார். ஏசு சங்கப் பாதிரிகள் அக்பரைப் பற்றி ஒரு குறிப்பு தரு கிறார்கள். "எல்லா நாஸ்திகருக்கும் பொதுவான குற்றம் அக்பரிடத்திலும் காணப்படுகிறது. நாஸ்திகர் தங்களுடைய பகுத்தறிவை மத நம்பிக்கைக்கு கீழ்ப்படுத்த மறுக்கிறார்கள். மனித அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களையெல்லாம் குறைபாடுள்ள தங்கள் அறிவாராய்ச்சிக்கு உட் படுத்துகிறார்கள். ' இதுதான் பாதிரிமார்களின் குறிப்பு. அந்தம் பாதிரிகளின் கருத்துபற்றி பண்டிதரின் கருத்து என்ன தெரியுமா? "ஒரு நாத்திகனுக்குரிய லக்ஷணங்கள் மேற் கூறியவைகள் தான். என் றா ல் அக்தகைய