________________
ப ஆறுமாதக் கடுங்காவல் நாத்திகரின் தொகை பெருகுவதால் நாட்டுக்கு நன்மையே ஒழிய வேறில்லை "" 171 இதுதான் பண்டிதர் நேருவின் கருத்து! சிறையி லிருக்கும் போதுள்ள கருத்து! சிம்மாசனம் ஏறிய பிறகு அல்ல! அவர் அதை மறந்தார் மதுரை ஆலயத்தின் தங்க மயிலைக்கண்டு மகிழ்ந்தார். மீனாட்சி ஷாஜஹான் காலத்திலே செய்யப்பட்ட மயிலாசனம் ஏழைகளின் வியர்வை என்று எழுதினார் தமது நூலில்! மதுரைபோன்ற திருப்பதிகளிலே முடங்கிக் கிடக்கும் மயிலாசனங்கள் யாருடைய வியர்வை என சொல்லிடும் துணிவை இப்போது இழந்தார்! காரணம்-முன்பு கைதி! இப்போது பிரதமர்! அவர் மறந்ததை அவருடைய சொல்லாலேயே நாம் நினைவூட்டுகிறோம். பகுத்தறிவை மத நம்பிக்கைக்கு கீழ்ப்படுத்த மறுக்கிற நாத்தீகம், தொகை பெருகுவதால் நாட்டுக்கு நண்மையே ஒழிய வேறில்லை. இது, பண்டிதரின் பொன்மொழி! பகவத் சிரோண் மணிகளே! பஜகோவிந்தப் பித்தர்களே! பகுத்தறிவு வாதிகளின் 'புன்மொழி' யல்ல ! பண்டிதரின் பொன் மொழி மறு மலர்ச்சி மூழ்கு!மூழ்கு! ஆழமாக மூழ்கு! மூச்சடக்கி மூழ்கு! இன்னும் மூழ்கு! முத்து கிடைக்கும். பேசு! பேசு! பலமுறை பேசு! நாப்பழக்கம் ஏற்படும்! நன்றாகப் பேசுவாய்! ஆனால் கிளிஞ்சல்களை வாரி இறைக்காதே!