________________
172 கருணாநிதி ஒவ்வொரு பேச்சு மன்றத்திலும் இதைத் தவறாமல் சொல்லிவந்தேன். உரையாடலில் கலந்துகொண்ட தோழர் கள் ஒவ்வொருவரும் ஒளிபெறு வைரங்களாகவே மாறினர். ஒருநாள் 'மறுமலர்ச்சி' யென்னும் பொருளிலே நண்பர் கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டார்கள். பேசும் தோழர்களில் G. நாராயணசாமி என்றொருவர்! அவர் பேச எழுந்ததும் பேச்சு மன்றம் ஒரேயடியாக சிரிக்கும். ஆரம்பப் பேச்சாளர்தான் ! கொழிக்கும் - குள்ளமான அந்த உருவம் கையையும் உடம்பையும் ஆட்டிப் பேசும்போது கால் முளைத்த கத்தரிக்காய் போல இருக்கும்! பேசும் பொருளைவிட அபிநயத்திலே அதிக நகைச்சுவை பொதிந்து கிடக்கும். 6 னனில் ஆ ர்வம் ஆகஸ்டு 19ந் தேதியென்று கருதுகிறேன்; அன்று தான் மறு மலர்ச்சி பற்றி விவாதிக்கப்பட்டது. எங்கள் மன்றத்திலே ! ஜூலை 18 லிருந்து ஆகஸ்டு வேறு எதையும் பற்றி விவாதிக்கவில்லையா என்று கேட்கத் தோன்றும். ஒவ்வொருநாள் மன்றத் திலும் எத்தனையோ விஷயங்களைக் குறித்து 19 வரை விவாதித்தோம். உலக சூழ்நிலை பற்றியும் - ஒவ்வொரு நாட்டின் சுதந் திரக் கிளர்ச்சிகள் பற்றியும் - நமது கழகக் கோட்பாடு கள் பற்றியும் - வேறு கட்சிகட்கும் நமக்குமுள்ள வேறு பாடுகள் பற்றியும் - ஒவ்வொரு நாளும் கூடுகிற மன்றத்திலே விவாதிக்கப்பட்டது. முன்னூறுக்கு மேற்பட்ட கேள்விகள் கொண்ட வினாத்தாள் ஒன்று தயாரிக்கப்பட்டு மூன்று நான்கு நாட் கள் தொடர்ந்தாற்போல் அந்தத் தேர்வு நடத்தப்பட்டது.