பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 173 தேர்விலே யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்பதற் காக அல்ல; தெளிவு பெற வேண்டும் என்பதற்காக! ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் - இப்போது வாய்ப்பு ஏற்படும்போது சொல்லிவிடுகிறேன். எங்கள் நானூறு பேரோடு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருபது தோழர் களும் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் பள்ளி மறியலில் ஈடுபட்டு சிறையில் சில வாரங்கள் இருந்தார்கள். அவர் களும் பேச்சு மன்றங்களில் ஆர்வமுடன் கலந்துகொண் டார்கள். அந்த திராவிடர் கழகத் தோழர்களுடன் ராஜன் என்ற ஒரு பார்ப்பன நண்பரும் பள்ளி மறியல் செய்து சிறைக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னூறு கேள்விகளும் கேட்கப்பட்டு - அதற்குரிய பதில்கள் சொல்லப்பட்டதும் - அந்தப் பதில்களை விளக்கி உரையாற்றப்பட்டதும் - பெரிதும் பயனுடைய தாயிருந் தது எனத் தோழர்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். சில கேள்விகள் தோழர்களை திகைப்புறவும் செய்துவிட்டன. அதற்கு உதாரணம் தருகிறேன். ஜூலை 14ம் நாள் ஆச்சாரியார் வீட்டு மறிய லுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட தோழர் சம்பத், ஏன் அந்த நாளில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார்? இந்தக் கேள்வியைக் கேட்டதும் மன்றம் ஸ்தம்பித்து விட்டது, ஒரு விநாடி ! சம்பத் கலந்துகொள்ளவில்லையா? என்ற சந்தேகக் குறிகள் அவர்கள் முகங்களில் தோன்றி விட்டன.