பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 175 சிலவற்றை ஆராயத் தேவையில்லை. பெரிய நாடுகள் நோக்குவோமாயின் அவை மோகன இயல்போடு வாழ்ந்த வரலாறும் - அந்த மலர்ச்சி கருகி மண்மேடிட்டுப்போன சோக சரித்திரமும் - அந்த சரித்திரம் தரும் பாடத்தி லிருந்து நாம் பெறவேண்டிய நிலையான அறிவும் தென் படும். ரோமாபுரி-எத்தகைய கலைப்பண்போடு வாழ்ந்த நாடு / சீசரும், அண்டனியும் எழுப்பிய சிங்கக்குரல் எங்கே போய்த் தேய்ந்து மறைந்தது! இத்தாலிய நாட்டுப் பிளாரன்ஸ் நகரம் -மறுமலர்ச்சியின் தாயகம் - தாந்தே, பெட்ரார்க் போன்ற மகா கவிகளை உலவவிட்ட பூஞ்சோலை- லியனார்டோ போன்ற சிற்பக் கலைஞர்களை சிருஷ்டித்த பூமி - அந்தப் பெருமைமிகு இத்தாலிய மண், இப்போது உலகின் முன்னே முக்காடு போட்டுக்கொண்டு அமர்ந் திருப்பானேன்! மலர்ச்சியுற்றிருந்து - பிறகு கருகிப்போய் - மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படாமலே பட்டுப்போன பூங்கொடிபோல காட்சியளிக்கும் சமுதாயங்கள் பலப்பல! அந் த நிலையிலேயிருந்த சீன சமுதாயம் தான் இப்போது செழிப்புடன் பூத்து நிற்கிறது! ஒரு காலத்திலே கலை, இலக்கியம், ஓவியம்,ஆகிய வைகளில் சீரும் சிறப்பும் பெற்றிருந்து பின்னர் சீரழிந்தது சீன நாடு. ஏன்? கலை, மக்களுக்காக, சமுதாயத்தின் நிலையைப் பிரதிபலிப்பதற்காக ஆக்கப்படாமல் மகுட மேந்திகளுக்கான கேளிக்கைப் பொருளாக ஆக்கப் பட்டது. சிற்ப - இலக்கிய உணர்ச்சிகள் எல்லாம் சிற்றின்ப உணர்ச்சிகளுக்கு முன்னே நிற்க முடியாமல் -