________________
176 கருணாநிதி ணட அரண்மனை ஆடம்பர லாகிரிகளுக்கு முன்னே வாழ முடியாமல் தத்தளித்துத் தடுமாறிச் சாய்ந்தன. சமுதாயக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண் டிருந்த அந்நாள் காவலர்கள் ஆடம்பர கேளிக்கைப் போதையிலே மயங்கியிருந்தார்கள். பிறகு எப்படி நீண் தோர் பயணத்தை நடத்த முடியும். ரோம் நகரத்துப் பள்ளியறைகளைப் பந்தயத்தில் தோற்கடிக்கும் திறமை யுடையனவாய் இருந்தன சீனநாட்டுச் சிற்றின்பக் கூடங் கள், ஒரு காலத்திலே! 'வீ' என்று ஒரு அரசி இருந் தாளாம் -செல்வாக்குபெற்ற சரசி. கட்டிலிலே இருந்த மன்னனை ஒரு வரம் கேட்டாளாம். " அட்டியில்லை கண்ணே! என்ன வேண்டுமென்றானாம் அவன்! "நம் ஆட்சியின் கீழுள்ள ஆணழகரை யெல்லாம் அழைத்து - அவர்கள் எல்லோரினும் சிறந்தவனை என் அந்தப்புரத்துக்கு அனுப்பிவையு ம் என்று கேட்டாளாம். வேந்தனும் தலையசைத்தானாம். இன் னொருவன் இருந்தான். சீனாவின் மன்னனாய்! ஷிங் என்று பெயர். கன்பூஷியஸ் காலத்திலே வாழ்ந்தான். அவன். தன் பஞ்சணையிலே வாசனைத்தூளைப் பரப்புவான். ஊரிலே உள்ள வேசிகளையெல்லாம் அழைத்து பஞ்சணை மீது நடக்கச் சொல்லுவான். அவர்களும் நடப்பார்கள். காலடி, அந்த வாசனைத்தூளின் மீது லேசாகப் பதிந்திருக்கிறதோ - அவளுக்கு முத்துமாலை களைப் பரிசளிப்பான். கனமாகக் கால் படிந்தவர்களுக்கு பட்டினிபோட்டு கனத்தைக் குறைப்பான். ஆக கா என்ன. கவலை நிறைந்த கலா உணர்ச்சி ! சீனப் பெண்களுக்கு பாதங்கள் மெல்லியதாய் இருக்கவேண்டுமென்ற வழக்க மும் அதையொட்டித்தான் வந்ததுபோலும். பாதங்களைக் கட்டிப் பண்படுத்தும் பழக்கமும் சீனாவில் பரவியது எவளுடைய