________________
ஆறுமாதக் கடுங்காவல் 177 அதனால் தான் போலும். சீன சமுதாயத்தை அழிக்கும் கண்மூடி வழக்கங்களை மண்மூடச் செய்திட கன்பூஷியஸ் என்ற பெரியோன் முயன்றான். அவனுடைய முயற்சி - நம் நாட்டுப் பட்டினத்தார் - தாயுமானவர் - இராமலிங்கர் ஆகியோரின் முயற்சிபோலத்தான் முடிந்தது! கருகிப்போய்க் கிடந்த அந்த சமுதாயம் சன்யாட்சன் காலத்திலே அரும்பிவிடத் தொடங்கியது! ஆனா பூரணத்துவும் பெறவில்லை. மீண்டும் அடித்த புயலிலே அரும்பு உதிர்ந்துவிடாமல் காப்பாற்றி - இன்றையதினம் மறுமலர்ச்சியின் காவலனாக வீற்றிருக்கிறான் மாசேதுங்! இரு நாடுகள் - இரு பாடங்கள் ! ரோம் - வாழ்ந்து கெட்டது! மலரவில்லை இன்னும்! சீனம் - சிதைந்தது- இப்போது செழித்தது! மலர்ச்சி அது து ! நாம் ? திராவிட நாட்டாராகிய நாம்? வாழ்ந்தோம் - வீழ்ந்தோம் மீண்டும் - மறு தலையெடுத் திருக்கிறோம்! மூன்றுநிலை மாறி மாறி வரும் நிலை! மூன்றாவது நிலை இனிமேல் வீழ்ந்து படாமல் நம்மால் காப்பாற்றப் படவேண்டிய நிலை ! ளால் மூன்று நிலைகளையும் ஓரிரு உதாரணங்களா விளக்குகிறேன். உலகத்திலே பல்வேறு நாடுகளும் தங்களுடைய சிறப்பை செங்கோலோச்சுவோரின் மூல மாகவே அந்நாட்களில் நிலைநாட்டின என்றாலுங்கூட - அந்த செங்கோலுக்கு பின்னால் மறைந்து நின்ற கலைத் திறமை இலக்கிய வளம் விஞ்ஞான அறிவு ஆகி யவைகளை நாம் மறந்துவிடக்கூடாது.