பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

178 கருணாநிதி இங்கிலாந்து - அரசர்களாலும் பெருமை பெற்றிருக் கலாம். ஆனால் ஷேக்ஸ்பியர் ஏற்றிவைத்த புகழ்தீபம் என்றும் அணையாத சுடர் கொண்ட து. பிரான்ஸ் என்றால் நெப்போலியனின் நினைவு வருவது போலவே- நாடக ஆசிரியர். மோலியேரின் நினைவும் வரத்தான் செய்கிறது. ஹாலந்து குடியரசான கதையைக் காணும் போது ஆரஞ்சு வில்லியம் எதிரே நிற்கிறான்.ஹாலந்தின் ஓவிய நிபுணன் ராம் ராண்ட்டும் நிழல்போல ஹாலந்தின் புகழைத் தொடருகிறான். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் இலக்கியமும் - கலை யும் - ஓவியமும் - சிற்பமும் - ஆட்சியோடு போட்டிபோட்டு அந்நாட்டுக்குப் பசுமை குலையாத புகழையும் பெற்றுத் தந்திருக்கின்றன. ஆட்சியோடு சேர்ந்து அந்நாடுகளைப் பாலைவனத் தரையாகவும் ஆக்கியிருக்கின் ஆக்கியிருக்கின்றன. அதே நிலைமையை நாம் நமது திராவிடத்திலும் காணமுடிகிறது. பாயும் அருவி - பறக்கும் கிள்ளை ஆவேசம் அள்ளும் வேங்கை - இவைகளை ஓவியத் திலே சித்தரித்தார்கள். மான் - - அழகு துள்ளும் அந்நாளில் வீர பரம்பரை நாட்டை ஆண்டுவந்தது! பிறகு - பாயும் அருவியிலே ஒரு தாமரை! தாமரை இதழிலே லட்சுமி! பறக்கும் கிள்ளையிலே மன்மதன்! அழகு துள்ளும் மான் அந்த மாய மானைத் துரத்தும் ராமன் - அவனுக்கோர் புராணம்! - இந்நாளிலே பக்திமான்கள் நாட்டைப் பரிபாலித் தார்கள்! இது இரண்டாவது நிலை-வாழ்ந்து கெட்ட நிலை! B புராண புறநானூறு கையிலே இருந்தது ஒரு நாள் இதிகாசங்கள் இலக்கியமாயின மறுநாள்-எழுத்தெல்லாம் புதுமையெனும் இனிமை, மொட்டவிழ்கிறது இந்நாள்!