________________
182 கருணாநிதி லும் வேகமாக பணியாற்றியது. அந்த ஒன்றரை மாத காலத்திற்குள்ளாகவே சில நல்ல பேச்சாளர்கள் தயா ரானார்கள். பலதிறப்பட்ட பொருள்களின் மீது விவாதம் நடத்தி பேச்சாற்றலை வளர்க்க முயற்சிக்கப்பட்டது. ஒரு நாள் 'ஜனநாயகம்' என்பது பற்றி மிகவும் அருமையாக நண்பர்கள் பேசினார்கள். பேசுவது மட்டு மன்றி ஜனநாயகத்தின் உண்மை உருவத்தையும் -ஜன நாயகம் என்ற பெயரால் நாட்டிலே திரியும் போலித் தலைவர்களின் தன்மையையும் ஆராய வேண்டியது இன்றைய சூழ்நிலையிலே மிக மிக அவசியமான காரியம். - எந்தச் சொல்லிலும், அதனதன் பெயரிலே மயங்கி விடாமல் அது புரியும் செயலை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். உதாரணமாக- கும்பாபிஷேகம் கொள்ளை யடித்தல் - என்ற இரு வார்த்தைகளை எடுத்து கொள்வோம். க் பழையகால மன்னர்கள் கட்டும் கோயில்களில் மூல விக்கிரகம் அமைக்கும்போது அதன் அடியில் விலை உயர்ந்த நவரத்தினங்களை அளவின்றிக் கொட்டி-அதன் மீது விக்கிரகத்தை அமைப்பார்கள். இந்த ரகசியத்தை சில பெரிய மனிதர்கள் உணர்ந்திருப்பார்கள். அந்தப் பழைய காலத்து ஆலயத்தைப் புதுப்பித்து, ஜீரணோத் தாரண மகா கும்பாபிஷேகம் ' நடத்தப்போகிறேன் என்று பெரிய வள்ளலைப்போல கிளம்புவார்கள். அவர் களுடைய குறியெல்லாம் மூல விக்கிரகத்தின் அடியிலே அந்தநாள் மன்னர் கொட்டியிருக்கும் நவரத்தினங்களின் மீதுதான். கோயில் பழுது பார்க்கும் வேலை நடைபெறும். அந்தப் பார்வையினுள்ளே மூல விக்கிரகத்தின் அடிப் பாகம் தோண்டப்பட்டு நவ ரத்தினங்கள், வள்ளல்களின்