பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 183 வீடுபோய்ச் சேர்ந்துவிடும். கிடைத்த லாபத்திலே- கால் பங்கு செலவிலே- கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். "கொடைவள்ளலே! குணக்குன்றே!" எனப் பக்தர்கள் பாராட்டுவார்கள். கும்பாபிஷேகம் என்ற குளிர்ச்சியான சொல்லிலே திரை மறைவுக் கொள்ளை சுமுகமாக நடைபெற்று விடுகிறது. ஒரு சில கொள்ளைக் காரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கொள்ளை யடிப்பதே தொழில். கொள்ளைக்காரர் என்ற பகிரங்கப் பட்டமும் பெற்றவர்கள். அவர்கள் கொள்ளையடித்த பொருள்களை எல்லாம் ஏழைகளுக்கே பங்கிட்டுக் கொடுத்து அதில் ஓர் தனி இன்பம் கண்டிருக்கிறார்கள். . இரண்டு வார்த்தைகள் - கும்பாபிஷேகம் - கொள்ளை யடித்தல்! கும்பாபிஷேகத்தின் பெயரால் கொள்ளை கொள்ளையின் பெயரால், கும்பாபிஷேகத்தை விட சிறப்பான செயல்! இப்போது · யோசிப்போம்! ஜனநாயகம் என்ற சொல்லைப்பற்றி ஜனநாயகம் சர்வாதிகாரம் - கும்பா பிஷேகம் - கொள்ளையடித்தல் இந்த வார்த்தைகளையும் பொருத்திப் பார்ப்போம். ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகாரம் தலைவிரித் தாடும் நாடுகள் எத்தனையோ உண்டு! வெகுதூரம் போவானேன்; இந்தியாவிலே எத்தனை ஆதாரம் வேண் டும் அதற்கு! சட்டசபையிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மதிப்பு கொடுப்பது தன்னிஷ்டத்தைப் பொறுத்தது என சென்னை மந்திரியார் ஆச்சாரியார் கூற வில்லையா? மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களும், மக்கள் முன்பு தேர்தலின்போது நிற்காதவர்களும் கொல்லைப்புற