________________
ஆறுமாதக் கடுங்காவல் 185 கும்பாபிஷேகத்தையும் ஜனநாயகத்தையும் ஒன்றாக ஒப்பிட்டுவிட்டேனேயென்று கருதுகிறீர்களா? கும்பாபி ஷேகம் நல்ல எண்ணத்தோடு செய்யப்படுவதும் -பக்தர் களால் பாராட்டப்படுவதும்கூட உண்டு? நாம் ஆராயப் புகுந்தது கும்பாபிஷேகத்தின் தன்மையை அல்ல! அதை நடத்துவோரின் குறிக்கோளைத்தான். பக்தர் களுக்கு இனிப்பான வார்த்தை நாசகாரர்களின் நாடகத் திற்கு பயன்படுகிறது. மக்களுக்கு இனிப்பான 'ஜன நாயகம்' என்ற வார்த்தை மதோன்மத்தர்களால் பாழ் படுத்தவும் படுகிறது. அழகான மலர்மாலையைப் பிய்த் தெறியும் மந்தியும் உண்டு. காதலியின் கழுத்திலே அணிந்து களிப்படையும் காதலனும் உண்டு. மாலையின் நிலையிலே ஜனநாயகமும், மந்தியின் நிலையிலே ஆட்சி யாளரும் இருந்துவிட்டால் அந்த ஜனநாயகம் யாருக்குப் பயன்பட முடியும்! நடந்து ஜனநாயகத்தின் பெயரால் கொடுமைகள் விடுகின்றன. உதாரணம் சுலபமான உதாரணம் ளங்கை நெல்லிக்கனி போன்ற உதாரணம் - இந்தியா! உள் சர்வாதிகாரத்தின் பெயரால் நன்மைகள் மலர் வதும் உண்டு! கொள்ளைக்காரன் ஏழைகளுக்கே உதவு கிறான் என்று பார்த்தோமே - அதுபோல! உதாரணம் தற்காலிகமாக எகிப்தையே எடுத்துக் கொள்ளுவோம்! ஸ்டாலினின் ரஷ்யாவையும் காண்போம்! தோட்டத்து மலர்கள் அத்தனையும் ஒருவனே பறிப்பது - பறிக்க உரிமை கொண்டாடுவது - பறித்த மலர்களை இப்படித்தான் கசக்கி எறிவேன் என்பது- சர்வாதிகாரம் என்றால், பறித்த மலர்களை பாங்கான மாலையாக்கி, மக்கள் மன்றம் என்ற எழிலோவியத்திற்கு