பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

186 கருணாநிதி அணிவிப்பது சர்வாதிகாரத்துடன் ஒட்டியிருக்கும், நல் லெண்ணம் நிறைந்த ஜனநாயக உணர்ச்சி என்றுதான் கூறவேண்டும். இந்த சர்வாதிகாரம் என்ற வார்த்தையை கொள்ளை யடித்தல் என்ற வார்த்தையோடு கூட ஒப்பிடுவது தவறு தான்! விளக்கம் தெளிவாக இருக்கவேண்டு மென்பதற் காக அந்த உதாரணத்தைக் கையாள நேரிட்டது. மக்கள் தான் ஜனநாயகத்தை தோற்றுவிக்கிறார்கள். ல சமயங்களில் அவர்களும் அதை அழித்து விடுகிறார்கள். "நாங்கள் வெட்டிய கிணறு தானே ! ஆளுக் கொரு கல்போட்டு தூர்த்துவிடுகிறோம்" என்று கூறுகிற அறியாமையை ஒத்ததாகும் இது. "நாம் வெட்டிய கிணறு தான் ஆளுக்கு ஒரு குடம் தண்ணீர் எடுக்கத்தான் உரிமை யிருக்கிறது கல்போட எண்ணுவது தவறு அதற்கு உரிமையளிக்கவும் கூடாது" என்ற அறிவுரை யுடன் கற்களைத் தடுப்பதற்காக கிணற்றின் மீது இரும்பு வலை போடுவதும் உண்டு. அந்தத் தற்காப்பு வலை சில நேரங்களில் சர்வாதிகாரம் போன்று தோன்றினாலும் அது ஜனநாயகக் கிணற்றைக் காப்பாற்ற பெரிதும் பயன்படுகிறது. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் இந்த முறையைத்தான் வருங்காலத்தில் ஜனநாயக ரீதியில் நாடாளப்போகிற திராவிட முன்னேற்றக் கழகம் அதன் பொதுச் செயலாளர் மூலம் கடைப்பிடித்து நிற்கிறது. இந்தியாவின் ஆட்சியாளரும் ஜனநாயகக் கிணற்றைப் பாதுகாக்கிறார்கள். கிணற்றின் உள்ளே கல் விழாமல் இரும்பு வலை போட்டல்ல! பெரிய இரும்புத்தகடே போட்டு மூடியிருக்கிறார்கள்; கிணற்று நீரை யாரும் மொண்டு விடாமலும் - கிணற்றுக்குள்ளே சூரிய ஒளியும் - காற்றும் சென்றுவிடாமலும் பார்த்துக்கொள்வதற்காக!