பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

188 கருணாநிதி பற்றி நான் கிறார் என்று! அது பற்றி குறிப்பிட்டேன். வாமனன் இரண்டடியால் உலகை அளந்துவிட்டு, மூன்றா வது அடியை மாபலி என்ற மனிதன் தலையிலே வைத்து அழுத்தினான்! ஆனால் வள்ளுவன் மனிதன் தலையிலே ஏறிக்கொள்ளவில்லை. மனிதனுக்காக நீதி வகுத்தான் என்று விளக்கிச் சொன்னேன். 'நாற்காலி' என்னும் பொருள்பற்றி ஒருநாள் உரை யாற்றினோம்.இப்படி எத்தனையோ சொற்பொழிவுகள்! சிறைக்குச் சென்றாலும் அது விடுகிறதா என்ன! ஒரு நாள் பேச்சுமன்றம் வேண்டாம் என்று ஓய்வு எடுத்துக்கொண்டாலும் தோழர் வைத்திலிங்கம் விட மாட்டார். அவர் ஓர் இளம் பேச்சாளர். சிறைக்கு வரு வதற்கு முன்பே மேடைகளில் பேசி பழக்கப்பட்டவர். மேடைப்பேச்சுக்கு மெருகேற்றிக் கொள்ளுகிறேன் 'என்று கூறிக்கொண்டே அவர் தினந்தோறும் மன்றத்தைக் கூட்டும் முயற்சியில் தோழர் வேணுவுடன் சேர்ந்து கொள்வார். எல்லோரின் ஆர்வத்திலும் மன்றம், பயன் விளைவிக்கும் மணிமண்டபமாயிற்று. 'கருப்பும் - சிவப் பும்' என்ற தலைப்பிலே - நீக்ரோவர் - செவ்விந்தியர் நிலைமையிலிருந்து திராவிடர் நிலைமைவரையிலே விளக்கப் பட்டது. அது நாமெல்லாம் மொழிப்பித்துகொண்டு அலைகிறோம் என்று அரசியல் எதிரிகள் குற்றம் சாற்றுகிறார்களே; எவ்வளவு தூரம் உண்மையென்று ஒரு நாள் விவாதித்தோம். மொழிப்பற்றா? - பித்தா? என்ற தலைப்பின் கீழே! இது பற்றி கொஞ்சம் சொல்லி விட்டு பிறகு எங்கள் அன்றாட நிகழ்ச்சிகளிலே ஏற்பட்ட வேறு சில புதுமைகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். க ஏ