________________
190 கருணாநிதி தவறு! அந்தப் பித்து ஏற்பட அடிப்படை எது ? பற்றை அறுக்க முனைவதுதானே ! அந்த வேளையைச் செய்வது யார்? மொழியிலே நாம் பற்று வைக்கிறோம். அதை யறுத்து நம்மைப் பித்தர்களாக்குகிறார்கள். ஆகவே பித்துபிடிப்பது நம் தவறல்ல - அத்தகைய பித்து தவறுமல்ல! இந்த முடிவுக்கு பேச்சு மன்றத்தினர் வந்தோம். மொழிக்காக உயிர் கொடுத்த நடராஜன் இருவரின் கல்லறையிருக்கும் பார்த்து வீர வணக்கம் செலுத்தினோம். தாளமுத்து திசையைப் லத்தீன் மொழியின் ஆதிக்கம் ஐரோப்பாவெங்கும் பரவி வேறு நாட்டுத் தாய்மொழிகள் எல்லாம் தலையெடுக்காமல் அழுந்தியிருந்த காலத்தில் தாய மொழிப் பித்துக்கொண்டு- "இனி லத்தீனில் எழுதுவ தில்லை, எமது பிரஞ்சு மொழியிலேதான் எழுதுவோம் என்று சபதம் எடுத்துக்கொண்டுக் கிளம்பிய பிரஞ்சு நாட்டு இளம் எழுத்தாளர்களை - 16 ம் நூற்றாண்டின் மொழிக் காவலர்களை பெருமையோடு நினைத்துக கொண்டோம். அந்த சரித்திரத்தையும் படித்துவிட்டு- இப்போது தாய்மொழியை மறந்து - ஆதிக்கக்காரர் களின் மொழியாம் இந்திக்கு ஆலவட்டம் சுழற்றும் ஆஷாட பூதிகளின் வரலாற்றையும் பார்க்கின்றபோது எவ்வளவு வேதனையாயிருக்கிறது என்று கண்ணீரும் விட்டோம். எம்மையறியாமலேயே - மொழிப்பித்து ஏற்பட்டு விட்டது. " தமிழென்று தோள் தட்டி ஆடு! அந்தத் தமிழ் வெல்க என்றே தினம் பாடு!"