பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் என்று பேரொலி யெழுப்பினோம். 191 "கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம் - கிழித்தெறியத்தேடுது காண் பகைக் கூட்டத்தை" என்று சூளுரைத்தோம். அன்றைய மன்றம் முடிந்தது. அதிசயம்! சிறைச் சாலையில் ஒரு நாள் பேச்சு மன்றம் கடை பெற்றுக் கொண்டிருக்கிறது. மன்றத்து மத்தியிலே நான் அமர்ந்திருக்கிறேன். வெள்ளுடை அணிந்த ஒரு நர்ஸ் அங்கு வந்தாள். தான் கல்லக்குடிக்குப் பக்கமுள்ள ஆஸ்பத்திரியில் வேலை பார்த்ததாகவும் போராட்டத்தில் காயம்பட்டவர்களுக்கெல்லாம் தானே சிகிச்சை செய்த தாகவும் கூறினாள். அவள் பேச்சிலிருந்து நமது இயக்க அனுதாபமுடையவள் என்று புரிந்தது. நல்ல சிவப்பு. குறு குறுப்பான பார்வை. கவரும் சக்தி படைத்தவள். என்னையே கேட்டாள். 'நான் தான்' என்றேன். "ஓகோ அரும்பு மீசை வைத்த தும் அடையாளமே ரியவில்லை" என்றாள். போய்விடு வாளாக்கும் என்று எதிர்பார்த்தேன். போகவில்லை. நின்றுகொண்டேயிருந்தாள். 6 க (600) நிதி எங்கே என்று 4 சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு கிழவரும் வந்தார். அவர் அவர்களுடைய தந்தையாம். "அப்பா! இவர் தான் கருணாநிதி" என்று அவருக்கு என்னை அறிமுகப்படுத்தி னாள். ஏன் இருவரும் அங்கு வந்தார்கள் தெரியுமா? அந்த 'நர்ஸ்' என்னைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமாம். திடீரென்று என்னைப் பார்த்துச் சொன்னாள்; "நான் உங்களைக் காதலிக்கிறேன் என்று! நான் திடுக்கிட்டுப்