பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

192 கருணாநிதி சிரித்து நான் போனேன். பேச்சு மன்றம் கொல்லென்று விட்டது. நர்சுக்கு அப்போதுதான் நாணம் பிறந்தது. தந்தையை அழைத்துக்கொண்டு போய்விட்டாள். வெட்கத்தால் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தேன். இதோடா முடிந்தது! ஒரு தயிர்க்காரிக்கும் தோழர் சத்திக்கும் தகராறு ! தயிர்க்காரி தன் கணவனிடத் திலே சத்தியின் விஷமத்தைப்பற்றிக் கூறிவிட்டாள். அவள் கொஞ்சம் இளம் வயதுக்காரி. சத்தியும் மாகாதபிள்ளை! ஏதோ தவறு நடந்து விட்டது! அதை பேச்சு மன்றத்திலே சிரிப்பாய் சிரிக்க வைத்துவிட்டாள் அந்தப் பொல்லாத தயிர்க்காரி. தோழர் ராமசுப்பையா, அவளிடம் மோர் வாங்கிக்கொண்டு கடன்சொல்லி ஏமாற்றிவிட்டாராம். சிறையிலே அவர் காசுக்கு எங்கே போவார். அதையும் பெரிய குற்றச்சாட்டாக்கி காரைக் நாணயத்தைப்பற்றி வெளுத்து வாங்கி குடியாரின் விட்டாள். மண என்ன மூக்கிலே விரலை வைக்கிறீர்கள்! சிறைச் சாலையிலே பெண்கள் எப்படி வந்தார்கள் என்றுதானே ஆச்சரியப்படுகிறீர்கள்? பேச்சு மன்றத்திலே நடந்த (Fancy Dress ) மாறு வேடப் போட்டியின் போதுகூட பெண்கள் வராமலிருந் தால் சுவைக்குமா என்ன? பெண்கள் மட்டுமா வந்தார் கள் ? ஒரு குடு குடுப்பைக்காரன் கூட வந்தான். 66 குடு குடு குடு குடு! நல்ல காலம் பிறக்குது - திரா விட நாட்டுக்கு நல்ல காலம் பிறக்குது! அந்த மூலையிலே ஒருத்தன் அய்யோன்னு போறான் - துரோகம் பண்ணி னவன் தொலையப்போறான் - காலையிலேகூட சொன் னேன் காலையிலே கூட சொன்னேன் சொரண்டிப்