பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் பிழைக்கிறவன் சுருக்குன்னு போறான்-குடு குடு ஒரு பழைய துணி இருந்தா குடு குடு குடு!” 64 193: குடு நரிக் குறவனும் - குறத்தியும் தோன்றினார்கள் ஆயாலக்குரி - ஆயாலக்குரி" என்று பாடியபடி டியே !' வயிறு புடைத்த அய்யரும் - வறுமையிலடிபட்ட நெச வாளியும் வந்தார்கள் ! குமரர்கள் கிளவர்களாக மாறி வந்தார்கள். ஆண்கள் பெண்களாக மாறிவந்தார்கள் அழகிகளாகக் கூட ! சிறைச்சாலையிலே ஏதோ ஒரு பெரிய மைதானத்தை ஒதுக்கிக் கொடுத்து அதிலே மாறுவேடவிழா நடத்துங்கள் என்று யாரும் அனுமதி தரவில்லை. வேலையில்லாத ஒரு ஞாயிற்றுக் கிழமையிலே தோழர்களின் சொந்த முயற்சி யிலே பல வேடங்களில் தோன்றி,பாடி,மகிழ்வித்தார்கள். சிறைச்சாலையிலே பூத்திடும் மலர்கள்- நான் மேலே போட் டிருந்த பச்சைத் துண்டு போன்ற ஆடைகள் - முடிவெட் டும்போது கத்தரித்த ரோமங்கள் - அடுப்பின் கரிகள் ஆகிய பொருள்களைக் கொண்டு, அலங்கார அணிகளும், ஆடைகளும்,மீசைகளும், தாடிகளும், தயார்செய்து யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பிரமாத வெற்றியுடன் நடத்தப்பட்ட அந்தப் போட்டியிருக்கிறதே; அது - வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைத்தான் நினைவூட்டியது. வல்லமையில்லாத ஆரியத்துக்கே புல் லும் ஆயுதமாயிருக்கும்போது வல்லமையுள்ளவர்களுக்கு இருப்பதுதானா பெரிய காரியம். 66 "" போட்டியின் நீதிபதிகளாக மன்னார்குடி நாராயண் சாமி, காட்டுப்புத்தூர் ராசமாணிக்கம், பேராவூரணி வடிவேல், வைத்தீஸ்வரன் கோயில் முருகையன், K.R. கலைமணி ஆகியோர் இருந்து தீர்ப்பு வழங்கினர்.