________________
ஆறுமாதக் கடுங்காவல் 195 மாயவரம் செபாஸ்டின் முதற் பரிசும், அபிவிருத்தீஸ் கருணா வரம் நடராசன் இரண்டாம் பரிசும், ஓவியன் மூன்றாம் பரிசும், (சக்கரசாமம்) அப்பாசாமி நான்காவது ஸ்பெஷல் பரிசும் பெற்றார்கள். கேட்டுக் இவர்களுக்கு பரிசளிப்பு விழாவை மன்னார்குடியில் தோழர் நாராயணசாமி நடத்துவதாக கொண்டார். மன்றமும் இணங்கியது. கடைசியாக ஒரு ஞாயிறன்று - பேச்சு மன்றத்தின் அறுவடையை கணக்குப் பார்க்கும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதுதான் பேச்சுப்போட்டி. திருவையாறு R. S. மணி, அழகான கருத்துக்களை அள்ளிச் சொரிந்து முதற் பரிசை அடைந்தார். திருவிட மருதூர் T.A. ராமசாமி, பெருமிதமான வார்த்தை யோட்டாத்தால் இரண்டாம் பரிசைத் தட்டிவிட்டார். உள்ளிக்கோட்டை சிங்காரவேல், எடுத்துக்கொண்ட பொருளை எழில் ததும்பச் சொல்லி மூன்றாம் பரிசுக் குரியவரானார். பேராவூரணி நகைச்சுவை ததும்பப் பேசி நான்காவது ஸ்பெஷல் பரிசை ஏற்றார். வடிவேல் பாப் அந்தப் போட்டிக்கு நீதிபதிகளாக, நானும், தோழர்கள் ராமசுப்பையா, அடைக்கலம், நாகை பையன், B.சாமிநாதன் ஆகிய நால்வரும் அமர்ந்து தீர்ப்பு வழங்கினோம். அவர்களுக்கு பரிசளிக்கும் விழாவை மாயவரத்தில் நடத்துவதற்கு தோழர் கிட்டப்பா கேட்டுக் கொண்டு மன்றத்தின் இணக்கம் பெற்றார். "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை' என்ற கவிஞரின் பாடலை உரக்கப் பாடினோம். உற்சாகம் கொப்பளிக்கப் பாடினோம்!