பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

196 கருணாநிதி நானூறுக்கு மேற்பட்டோரின் மொத்த வாழ்க்கை சிறையில் எப்படி நடைபெற்றது என்பதை விவரித்து விட்டேன். என் வாழ்வு எப்படி ஓடியது என்பதைக் கூறா மலிருக்க முடியுமா? சிறைச்சாலைக்கு வந்த சில நாட்களுக்கெல்லாம் என தருமைத் திருவாரூர் தோழர்கள் வந்து சேர்ந்தார்கள். எனது மைத்துனரும் வந்தார். எனக்குப் பக்கத்து அறைகளிலே அவர்களும் இடம் பிடித்துக்கொண்டார் கள். ராம சுப்பையா அவர்களுக்கு சரியான ஜோடியாக திருவாரூர் நாகப்பன் அவர்கள் இருந்தார். அவர்களிரு வரையும் பார்த்து நாங்கள் 'கிழவர்களே!' என்று கூப்பிடுவோம். ராமசுப்பையாவுக்கு உள்ளபடியே அதில் கொஞ்சம் வருத்தம்தான்.திருவாரூர் தென்னன்- அவரைப்பற்றி நான்ஒன்றும் அதிகமாகச் சொல்ல வேண்டாம்- நான் சிறையிலிருக்கும்போது அவர் வெளியே இருக்க முடியாது - ஒருவர்தான் தப்பித்தவறி வெளியே இருந்துவிட்டார் - C.D.மூர்த்தி என்பார்- தென்னனின் பெயரும் தெட்சணாமூர்த்திதான்! இரண்டு தெட்சணாமூர்த்திகளும் இரண்டு கண்கள்போல நட்புக்கு! இதைவிட இன்னும் என்ன சொல்ல இருக்கிறது. என்னு டைய தென்னனைப்பற்றி! அந்தத் தென்னன் தான் எமது சாப்பாட்டு விவகாரங்களை சரி பார்த்து கண் காணித்து வந்தார். நானும் சத்தியும் குளிப்பதற்குச் செல் லுவோம். வேணு ஓடிவருவார்- தண்ணீர் மொண்டு ஊற்ற! அவர்தான் என்னைக் குளிப்பாட்டிவிடுவார் என்றே வைத் துக்கொள்வோமே! எண்ணெய் தேய்த்து முழுகப் போகி றோம் என்று தெரிந்தால் போதும் - எப்படித்தான் தெரி யுமோ, ராம சுப்பையாவுக்கு! அவர் எண்ணெய் தேய்த்து விடாமல் குளிக்க முடியாது. முடியாதென்ன,கூடாது!