________________
ஆறுமாதக் கடுங்காவல் 17 கள்ளம் கபடமற்ற வாலிபத் தென்றல் என் எதிரே நின்று இதழோரத்தால் சிரிப்பு காட்டி, சிந்தையைத் தடவி ஜீவ காவியம் பாடுகிறது. குறைந்த ஊதியம் பெற்று, குழந்தைகள் நிறைந்த குடும்பத்தைக் காப் பாற்ற வேண்டிய சுமையும், கொள்கை வெறியைத் தணித்திட முடியாமல், ஓயாமல் பணியாற்றிட வேண்டு மென்ற ஆசையும், இந்த இரண்டிற்குமிடையே தன்னு டைய இளமையை அர்ப்பணித்து எடுத்துக்கொண்ட சிரமங்களும் அவரை - ஆம், ‘பரா’வை பத்தரைமாற்றுப் பசும் பொன்னாக்கிவிட்டது. மருத்துவ மனையில் என்னைக் கண்டதும் கண்ணீர் வடித்தார். தன் உடல்நிலை பற்றிய கவலையால் அல்ல! தானும் போர்முரசு தட்ட வரமுடியவில்லையே என்று! "வாளில்லாமல் போரா? 'ரா' இல்லாமல் களமா?" என்று நானுந்தான் எனக்குள்ளாகக் கேட்டுக்கொண் டேன். ஆறுதல் படலம் முடிந்தது. பிறகு விடைபெற்று எங்கள் பிரயாணத் திட்டத்தை நிறைவேற்றத் துவங்கி னோம். முதல் நாள்: 66 ஜூலை 15-ம் நாள் கழகத்தின் நாள் ஏடு 'நம்நாடு”” நேர்மையின் திரு உரு பொன்னம்பலனார் அவர்கள் நிர்வா கத்தின் கீழ் துவக்கப்பட்டது. அந்நாள் முதலே தான், டால்மியாபுரம் " பெயர் அகற்றும் போராட்ட விளக்கக் கூட்டங்கள், நடைபெறத் துவங்கின. முதல் நாள் முரசம், மணல்மேட்டில் அதிர்ந்தது. மணல்மேடு, அழகான சிறு கிராமம். கண்கவரும் தோப்புகள். அங்கே பண்பாடும் சிறுவர்கள். அரசியல் கொந்தளிப்புகளைத் தொட்டுப்