பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 197 அவருடைய திருக் கரங்களால் எண்ணெய் தேய்த்து - சீயக்காய் தேய்த்து குளிப்பாட்டும்போது - என் அன்னை யின் பொற்கரங்களின் ஸ்பரிச உணர்ச்சியையே கண் டேன் நான். குளித்துவிட்டு அறைக்கு வருவோம். வீட் டிலே மனைவிகூட அவ்வளவு ஒழுங்காக உடைகளை எடுத் துத் தந்து உபசரிக்க முடியாது; அத்துணை அழகாக உடைகளை எடுத்து வழங்குவார் தோழர் கஸ்தூரி. உடை இலாகாவை அவரிடம் தான் ஒப்புவித்திருந்தோம். உடனே தென்னன் காலை உணவுடன் எங்கள் அறையில் நுழை வார். சாப்பிட்டானதும் ஒரு சிகரெட் பிடிக்கலாம் என்ற காரணத்திற்காக சாப்பிடுவோம். அத்தகைய சாப்பாட் டுக்கும் ஒரு இலக்கணம் வகுத்துக்கொண்டு- நம்மோடு ஒட்டிவராவிட்டால் அதோடு நாம் ஒட்டிப்போவோம் என்ற தத்துவார்த்த சிகரமாக எம்முடன் ஒருவர் இருந் தார். அவர் தான் திருவாரூர் டாக்டர் விசயராகவன். சிறை யிலே தரப்படும் கடலை உ உருண்டை என்றால் அவருக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா? ஒரு நாள் அவர் கடலை உருண்டைக்காக இன்னொரு தோழருடன் பந்தயம் கட்டி நூறு 'பஸ்கி' போட முனைந்தார். பந்தயத்தில் தோற்ற தால் கடலை உருண்டை கிடைக்கவில்லை. தொடை முழு தும் கட டலை உருண்டைகள் போல வீங்கிவிட்டது. இரண்டு மூன்று நாள் மறுத்துவ மனையில் இருந்தார். ஜெயில் ஜாம்பவான்' வேலைக் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கெல்லாம் போகலாமா? 66 காலை உணவு முடிந்ததும் நண்பர்கள் மன்னை நாரா யணசாமி, அடைக்கலம், விசயராகவன், அத்தான்,வடி வேலு, சத்தி, தென்னன்,முத்துப்பேட்டை தெட்சணா மூர்த்தி, கோபாலசாமி, வேணு,வையிதீஸ்வரன் கோயில் முருகையா, திருவையாறு மணி,எதிராஜ்,உசேன் ஆகி