பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

198 கருணாநிதி யோர் ஓரிடத்தில் கூடுவோம். பழைய காலத்து ராஜா ராணிகளைப் பற்றியும், அவர்களுக்கு 'ஜோக்கர்' போல இருந்த பிரபுக்களைப்பற்றியும் பேசுவோம். இங்கிலாந்து சரித்திரத்திலே இப்படிப்பட்டவர்களின் கேளிக்கைகள் மிக மிக அதிகமல்லவா? கொரியாவுக்கு செல்லும் இந்தி யத் துருப்புகள் பற்றியும் விவாதங்கள் நடத்துவோம். குடியரசு காலத்திலேகூட முடியரசு இருக்கிறது பாரீர் என்று நாராயணசாமிக்கும், விசயராகவனுக்கும் தலையில் துப்பட்டியால் முண்டாசு கட்டி வேடிக்கை செய்வோம். சிறைச்சாலைக்கு சென்றதும் - எப்படியெல்லாம் விளை யாடத் தோன்றுகிறது பாருங்கள். அமைதியான தோற்றமும்-ஆர்வம் நிறைந்த உள்ள மும் நட்புக்கோர் அணிகலனுமான வைத்தீஸ்வரன்கோயில் தோழர் முருகையா, சிறைச்சாலையைவிட்டு வெளியேறு கிற அந்தக் கடைசி நாளின் காலையிலேகூட ராஜா ராணி வேடிக்கை செய்து, அவருக்கு முண்டாசு கட்டிவிட்டுத், தான் வெளியே அனுப்பினோம். சு இப்படி வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் சிறைச்சாலையின் கொடுமைகளை விரட்டிக்கொண்டிருக்க- உதவி புரிந்த அருமைத் தோழர்கள் எல்லாம் எங்களை விட்டுப் பிரியும் காலம் வெகு விரைவில் வந்துவிட்டது. ஆச்சாரியார் ஆட்சி - எனக்கு ஆறுமாத தண்டனை கொடுத்ததுகூடப் பெரிதல்ல! என் அன்புத் தோழர்களை என்னோடு சேர்த்துவைத்து, அவர்கள் பிரிந்து செல்லும் வேதனையை அடிக்கடி உண்டாக்கினதே; அதுதான் பெரிய தண்டனையாக இருந்தது. தோழர் N.V.நடராசன், அடக்குமுறையின் கோரப் பொறியில் அகப்படுவதற்கு முன்பு - எனக்கு ஒரு கடிதம் .