________________
ஆறுமாதக் கடுங்காவல் 199 எழுதியிருந்தார் - " வெளியில் என்ன நடக்கிறதோ என்று கவலைப்படுவீர்கள் ! வளர்கிறோம் வளர்கிறோம் - மகிழ்ச்சி படை டயுங்கள் ” என்று ! சிறைச்சாலையில் என்னை சந்திக்க வந்த அண்ணா அவர்களும் சொன்னார்; "வெளியுலகைப் பற்றி நினைத்து மனதை அலட்டிக்கொள்ளக்கூடாது" என்பதாக! இருந்தாலும் முடிகிறதா; நாங்கள் பிரிந்துவரும் தமிழகம் ரத்தக்காடாகவல்லவா இருந்தது! ஆயிற்றோ?" என் று ஏங்கிக்கொண்டுதான் போது “ என்ன கிடந்தோம். "" கல்லக்குடியிலே போராட்டம், சிந்தனைச் சிற்பி சிற்றரசு அவர்களின் தலைமையிலும் - திருச்சி தீரர்களின் மேற்பார்வையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அண்ணாவும் மற்றவர்களும் சிறைக்குள்ளே அனுப்பப் பட்டுவிட்டார்கள். "தலைவர்களை விடுதலை செய் என்ற முழக்கம் நாடெங்கும் கேட்கிறது. ஆச்சாரியாரும், கவர்னரும் செல்லுமிடமெல்லாம் கருப்புக் கொடிகள் காட்டப்படுகின்றன. இந்த நிலைமையிலே வட நாட்டிலே யிருந்து நேருவும் வருகிறார். அக்டோபர் முதல்நாள் ஆந்திர அரசு அமைகிறது. அதைத் துவக்கிவைக்க பண்டித நேரு அழைக்கப் பட்டிருக்கிறார். மொழிவழி மாகாணத்திற்காக ஆந்திரா வில் கிளம்பிய நாற்பது வருடத்துக் கிளர்ச்சிக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. பதவிக்காக கட்சிகள் மாறும் பிரகாசம், காங்கிரசில் சேர்க்கப்படுகிறார். ஆந்திராவின் முதல் பிரதமராகினார். ஆந்திர அரசு துவக்க நாளிலே மகிழ்ச்சி ஆரவாரத்துடனே - தலைவர்கள் பேசுகிறார்கள்.