________________
200 கருணாநிதி நேரு பண்டிதர் பேசுகிறார். சென்னை மந்திரி ஆச்சாரியார் பேசுகிறார். ஆந்திரப் பிரதமர் பிரகாசம் பேசுகிறார். எங்கே நின்றுகொண்டு! பொட்டி ஸ்ரீராமுலுவின் எழும்பு மேட்டின்மீது நின்றுகொண்டு! ஆனால் ஒரு வார்த்தை அந்த தியாக சீலனைப்பற்றி யாரும் பேசியதாகத் தெரிய வில்லை. மாறாக, உண்ணாவிரதத்தைக் கிண்டல் செய்கிறார் அந்த இடத்திலே நேரு! உண்ணாவிரதம் நாமும் தான் தவறு என்கிறோம். அதற்காக-நாட்டுக்காக தியாகம் செய்த ஒரு வீரனை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா? காந்தியார் உண்ணாவிரதத்தின் முடிவு இதுபோல் ஆகியிருந்தால் -நேரு கிண்டல் செய்திருப்பாரா? உண்ணா விரதம் - மறியல் - அறப்போர் - முதலியவைகள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுந்தான் ஏகபோக சொத்தா? மற்ற யாரும் அதைத் தொடவே கூடாதா? எப்படியோ எல்லோரும் தியாகியொருவரை மறந்து விட்டு புதிய அரசுக்கு வாழ்த்துக்கூறினர். அதற்குள் இங்கிருக்கும் சிலர், "ஆந்திரா பிரிந்துவிட்டது - இனிமேல் திராவிடநாடு கோஷம் ஒழிந்துவிட்டது ” என்று தீர்ப்புக் கூறிவிட்டனர். ஆந்திரா பிரிந்ததால் "வேங்கடத்தை விடமாட் டோம் " என்ற வீராப்புதான் வீழ்ந்ததே தவிர - திராவிட நாடு பிரச்சினை மடிந்துவிடவில்லை. ஆ ந்திர அரசு- சென்னையிலிருந்து தன்னை அகற்றிக்கொண்டது. மத்திய சர்க்காரின் பிடியிலிருந்து அது விலகிக்கொள்ளவில்லை. நாளைக்கு கேரளம் தனி மாகாணமாகலாம் கன்னடமும் அந்த நிலை பெறலாம். பிறகு தமிழகம் தனி மாகாணமே தான்! எல்லாமே தனி மாகாண அந்தஸ்து பெறமுடி