பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

202 கருணாநிதி வுக்கு எல்லா இடங்களிலும் கருப்புக்கொடி காட்டினர். அவரது பொதுவாழ்விலே அதுவரையில் காணாத எதிர்ப்பை அவர் கண்டார். கருப்புக்கொடி காட்டுவது, அரசியலிலே ஒரு முறை! நேருவுக்கும் தெரியாததல்ல! திராவிடரை "நான்சென்ஸ்" என்று இருமுறை இகழ்ந் தார் - ஒருமுறை மன்னித்தோம் பெரிய மனிதர் என்பதற்காக! மீண்டும் சொன்னார் -நாம் அவர்பால் கொண்ட தவறான கருத்தை மாற்றிக்கொண்டோம்! கண்டனம் தெரிவித்தோம்! 46 கண்டனம் தெரிவித்தோர் காட்டுமிராண்டிகள். காட்டுமிராண்டிகள் கூட அல்ல; அவர்கள் எவ்வளவோ மேல்! இவர்கள் அவரினும் இழிமக்கள்" என்று சுடு மொழி கூறினார் மூன்றாவது முறை! "எனக்கு நிகர் யாரு மில்லை எல்லாமே நான்தான் " என்றான் பதினான்காம் லூயி! அப்போது பிரான்ஸ் கொதித்தது! "புரட்சி வந்தால் எனக்குப் பின்னால் வரட்டும் என்று கூறினான் பதினைந்தாம் லூயி! பிரான்ஸ் குமுறியது! 46 ஒரு கை பார்ப்போம் என்றான் பாஸ்டிலியின் காவலன் பதினாறாம் லூயி ! பிரான்சின் எரிமலை வெடித்தே விட்டது! இவர்களிலே எந்த லூயி - நேருவின் வடிவத்திலே பேசுகிறானோ நமக்குத் தெரியாது! 'உலக சரித்திரம் எழுதிய நேருவுக்குத்தான் தெரியும் ! 66 அச்சம் கண்களை மறைக்கும்போது - குற்றவாளி யார்-நிரபராதி யார் - என்பது தெரியாமலே போய்விடும்." என்று நேருவே கூறியிருக்கிறார். கருப்புத் துணி யைக் கண்டால் கலக்கம் - ஒரு வகை அச்சம் ஏற்படுவது இயற்கை, நேரு போன்றவர்களுக்கு!