பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 203 ஆகவே அவரது பொன்மொழிக்கு அவரே இலக்காகி விட்டார். . 42 ஆகஸ்டு' போராட்டத்தின் தளபதி - நமது அறப்போராட்டத்தைப் பார்த்து காட்டுமிராண்டித்தனம் என்கிறார். என்ன செய்வது பாவம்; சில நேரங்களில் சிலர், நிலைக்கண்ணாடிக்கு நேராக நின்று பேசவேண்டிய வார்த்தைகளை, தவறிப்போய் நம்மிடம் பேசிவிடுகின்றனர். மதுரையிலே நேருவுக்கு கருப்புக்கொடி காட்டிய கிளர்ச்சியில், மாவீரர்கள் முத்து,அய்யாசாமி, ராசமான் மற்றும் பல தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். சென்னையிலும் முப்பது பேருக்குமேல் கை தியாயினர். மதுரையிலும், கோவையிலும் இளங்கோவும், கண்ண தாசனும் முன்னின்று கருப்புக்கொடி நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக்கினர். சென்னையிலே கண்ணபிரான், மாலைமணி பார்த்த சாரதி மற்றும் பலர் தடியடிக்காளா யினர், செங்கற்பட்டிலே அண்ணாமலை தலைமையிலே கருங் கொடி நிகழ்ச்சி வெற்றிகண்டது. நாள் தோறும்-நமது தோழர்கள் சிறைச்சாலைக்கு சென்று கொண்டிருப்பதும் - நாடெங்கும் கிளர்ச்சித் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதும் - தேனினு மினிய செய்திகளாக எங்களுக்குக் கிடைத்துக்கொண்டே யிருந்தது. எல்லோரும் போய்விட்ட காரணத்தால்-மிச்சமிருந்த ஐம்பதுக்குட்பட்ட தோழர்களை ராமசுப்பையா அவர்கள் வசம் ஒப்புவித்துவிட்டு நான் சிறிது ஓய்வுபெற்றேன்.