பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

204 கருணாநிதி பேச்சுமன்றமும் கிடையாது. ராஜாவுக்கு முடிசூட்டும் விளையாட்டும் நின்றுவிட்டது. எதையாவது படிப்பது, எதையாவது எழுதுவது, மீதி நேரங்களில் வேப்ப மரத்தடி! அங்கே சத்தியும் நானும்! எத்தனையோ இன்பக் கதைகளை அந்த வேப்பமரம் கேட்டிருக்கிறது - பேச்சின் ஒலிக்கு மாத்திரம் சக்தியிருக்குமானால் அந்த வேப்பமரம், இனிப்புமரமாக மாறியிருக்கும் - அவ்வளவு தித்திப்பான கதைகள்! ஒரு ஒரு நாள் நீண்டு உயர்ந்த மதிலுக்கு உள்ளே சிறிய பந்து வந்து விழுந்தது. வெளியிலே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் கையிலேயிருந்து தப்பி, அது எங்கள் கையில் சிக்கியது. உடனே ஒரு திட்டம் போட்டோம். ஒரு பழைய வேட்டியைக் கிழித்து வ வலைபோலக் கட்டினோம். எங்கள் கைகளைப் பந்தடிக்கும் Bat ஆக அக்கிக்கொண்டு தினந்தோறும் விளையாட ஆரம்பித்தோம். அந்த விளை யாட்டுக்கு பந்தயம் எல்லாம் கட்டுவது உண்டு. தோழர் வேணு, தனக்கு வந்த கட டலை உருண்டைகளை யெல் லாம் பந்தயத்தில் இழந்து - துவரையை இழந்து - சோற்றையும் ஒருநாள் இழந்து தரும மகாராஜன் போல நின்று கொண்டிருந்தார். தோழர் ராமசுப்பையா பந்து விளையாட்டில் என்னுடைய கட்சி- வருகிற பந்தையெல் லாம் சாமர்த்தியமாக அடித்துவிடுவார். ஆனால் ஒரு குறை - பந்து வளையைத் தாண்டி அப்புறம் போகாது! அவ்வளவுதான்! கஸ்தூரி, சத்தியின் கட்சியிலேயிருந்து விளையாடுவார். பந்து, தானாகவே போய் அவரது கையில் மோதி எங்களிடம் திரும்பிவரும் காட்சி அற்புத மாக இருக்கும். அவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடுவார்.