________________
ஆறுமாதக் கடுங்காவல் 209 அதிகாரிகளால் அங்கீகரிக்கப் படுவதுதான். நாங்களும் P. C. P. யில் பணம் கட்டியிருந்தோம். அதில் வாரா வாரம் ஓவல்டின், ஹார்லிக்ஸ், பிஸ்கட், சிகரெட், சிகரெட், பழங்கள், சோப்பு, எழுதும் பேப்பர், மை, காப்பித்தூள், சர்க்கரை, முதலியன வாங்கிக்கொண்டோம். ஒரு முறை பச்சைப் பட்டாணி டின் ஒன்று வாங்கி வரும்படி குறித்தனுப்பினோம். அது அங்கீகரிக்கப்பட வில்லை என்று கூறிவிட்டார்கள். " ஓ !நாம் கைதிகள்' என்று ஒரு முறை சொல்லிக்கொண்டோம். பாதுகாப்பு கைதிகளுக்கு 'பி' வகுப்பை விட நிறைய வசதிகளுண்டு. ஒரு சமயம் கம்யூனிஸ்டு தலைவர்கள் பாதுகாப்பு கைதி களாக வைக்கப்பட்டிருந்தது உங்களுக்குத் தெரியும். "டு" வகுப்புக் கைதிகளுக்கும் யாராவது மணியார்டரில் பணம் அனுப்பினால் சிறையில் வாங்கிவைத்துக்கொண்டு அவர்கள் விடுதலையாகி வெளியே செல்லும்போது கொடுத் தனுப்புவார்கள். அந்தப்பணத்தில் அவர்கள் தேவை யானது எதுவும் சிறையிலிருந்து வாங்கிக்கொள்ள முடியாது.சிறையிலுள்ள 'டவர்' என்னுமிடத்தில் ரேடியோ இருக்கிறது.ஆனால் எங்கள் பிளாக்கிற்கு காதில் விழாது. ஒரு ஸ்பீக்கர்' வைத்துத்தந்தால் ரேடியோ கேட்கமுடியும். அதை சூப்பிரண்டிடம் கேட்ப தென முடிவு செய்தோம். சூப்பிரண்டை (File) பைல் நாள் அன்றுதான் பார்க்கலாம். திங்கட்கிழமைதோறும் காலை 7 மணிக்கு ஒவ்வொரு பிளாக்கிலுமுள்ள கைதிகள் தங்க ளிடமுள்ள தட்டு, குவளை, எண் ஆகியவைகளுடன் அணி வகுத்து நிற்க வேண்டும். எங்கள் ராஜ்யத்திலும் நானூறுபேர் அணிவகுத்து நிற்கும் காட்சி மிக ரம்மியமா யிருக்கும். கடுங்காவல் கைதிகளான நாங்கள் சிலர் மட்டும் தலையில் குல்லா அணிந்து கொண்டு, சிறை எங்கள் பிளாக்கில்