________________
218 கருணாநிதி வெற்றி! வெற்றி!! சிறையிலிருந்து மீண்ட மறுநாள் நானும், சத்தி, தர்ம லிங்கம் ராமசுப்பையா, பராங்குசம் ஆகியோரும் கல்லக் குடி களத்தைப் பார்வையிடச் சென்றோம். "நான் விடுதலை பெறும்போது டால்மியாபுரம்-கல்லக் குடியாக காட்சியளிக்கவேண்டும் " என் று கேட்டுக் கொண்டு சிறை புகுந்தேன். 'வாருங்கள் அந்த வெற்றிச் சின்னத்தைக் காட்டுகிறேன்' என அழைத்துச் சென் றனர் தோழர்கள். ஆமாம். ஜூலை 15ல் நான் ஒட்டிவிட்டுப் போன கல்லக்குடி என்னும் தாள் தான் அங்கே மின்னு கிறது. டால்மியாபுரம் என்ற பெயரைக் காணவில்லை. கொரியாவுக்கும், காஷ்மீருக்கும் படைவீரர்களை அனுப்பும் பலம் பொருந்திய சர்க்கார், நாமோ சாதாரண மானவர்கள். அமைதியான அறப்போரை விரும்புகிற வர்கள். ஆனால் -நாம் ஒட்டுகிற கல்லக்குடி யென்னும் திருப்பெயரை அகற்றிட யாரும் முனையவில்லை. புகை வண்டி நிலையத்தில் நாள்தோறும் நமது கொள்கை முழக் கம் நடைபெற இடமளித்து - டால்மியாபுரம் என்கிற - அவமானச்சின்னத்தின் மீது கரியைப் பூச அனுமதியும், பாதுகாப்பும் அளிக்கிறார்கள் என்றால் இதை நமது வெற்றி என்றுதானே கூறவேண்டும். 66 சர்க்கார்இன்னும் அதிகாரபூர்வமாக பெயரை மாற்றவில்லையே " என்று ஒரு தோழர் கேட்டார். அவருக் கும் அவர்போல் சந்தேகம் கொண்ட நண்பர்களுக்கும் பின்வரும் பதிலைத்தான் நான் தரமுடியும்.