பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுஙகாவல் 219 கல்லக்குடி யெனும் பெயர் அதிகாரபூர்வமாக இடப் படவில்லை யென்பது உண்மைதான். நமது வெற்றியை அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை யென்பதுதான் அதன் பொருள். அதனால் நாம் வெற்றி யடையவில்லை யென்று கூறமுடியுமா? மாசேதுங் செஞ்சீனத்தில் வெற்றிக்கொடி நாட்டினார். சியாங்கேஷேக் பார்மோசாவுக்கு ஓடினார். ஆனால் ஐ.நா. சபை இதுவரையில் மக்கள் சீனத்தின் வெற்றியை அங்கீ கரிக்கவில்லை. செஞ்சீ னம் ஐ. நா. சபையில் இடம்பெற முயன்று - முயன்று - முடியவில்லை ! ஆனால் பர்மோசாவில் பதுங்கிய சியாங்கின் சர்க்காருக்கு ஐ. நா. விலே இன்னும் இடமிருக்கிறது.செஞ்சீனத்தை ஐ.நா. அங்கீகரிக்கவில்லை என்பதற்காக அதன் வெற்றியை யாராவது மறுக்க முடியுமா? சியாங்கின் தோல்வியைத்தான் மறைக்க முடியுமா? அதேபோலத்தான் - செஞ்சீன வெற்றி எனும் இடத்திலே கல்லக்குடியையும் - சியாங் சர்க்கார் என்னு மிடத்திலே 'டால்மியாபுரம்' என்ற பெயரையும் நிறுத்திப் பார்த்தால் நமது வெற்றி முழக்கத்திற்கு நல்லதோர் விளக்கம் கிடைக்கும். டால்மியாபுரம் பெயர் மாற்ற வெற்றியினாலேயே திரா விடநாட்டை திராவிடர்க்கு ஆக்கியதாக ஆகுமா என்ற ஐயமும் சிலருக்கு எழலாம். 1917ல் ரஷ்யப்புரட்சி வெற்றி பெற்றது. 1905ல் ரஷ்யாவில் நடந்த 'ரத்த ஞாயிறு புரட்சிக்கு முடிவு உண்டாக்கப் பயன்படவில்லை. புரட்சித் தொடர்கதையின் முன்னுரையாகத் தான் 1905ம் ஆண்டு எழுச்சி இருந்தது. பின்னர் பனிரெண்டு ஆண்டுகட்குப்பிறகே பாட்டாளியின் விடுதலைக் கொடி பட்டொளி வீசிப் பறக்க முடிந்தது ரஷ்யாவில்!