பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

" 220 கருணாநிதி அத்தனை ஆண்டுகள் இங்கே தேவைப்படாவிட்டா லும் - விடுதலை பெற அதிக விலை கொடுக்க வேண்டி நேரிடலாம். திராவிடத்தின் தேசீய எழுச்சி, இனி யாராலும் அடக்க முடியாது என்ற விதத்திலே - வளர்ந்தோங்கி யிருக்கிறது. மாற்றாரின் பாசறையிலும் - குறிப்பாக தேசீய வட்டாரத்திலும் திராவிட உணர்ச்சி குமுறிக் கிளம்பியிருக்கிறது. சிதறிக் கிடக்கும் திராவிடர்கள் சேரவேண்டியது தான் பாக்கி -நம் சிந்தைக்கினிய திராவிடத்தை மீட்டே தீருவோம் என்ற நம்பிக்கை மலர்ந்து விட்டது. அந்நிய ஆதிபத்யத்தை ஒழிக்க ஆரம்பித்த முதல் அறப்போரில் ஏற்பதற்கு முன் நான் பாடிய ஆறுமாதக் கடுங்காவல்' நண்பர் கருணானந்தம் அவர்களின் எழுச்சிமிக்க பாட்டின் உங்கள் நெஞ்சில் முதல் வரிகளை முடிக்கிறேன். 66 “ சேர வருவீரே ! - சேர வருவீரே ! சேர சோழ தென்பாண்டி நாட்டார்! நிறுத்தி இதை வீர காவியம் தீட்டும் போரில் சேர வருவீரே !”