பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 25 நமக்கு சூட்ட, பகிரங்கப் பலாத்காரக் கட்சிகள் பறை சாற்றிவிடப் போகின்றன ! போர்க் கருவிகள் என்று கழக உறுப்பினர்களையும், வீரர்கள் என்று செயற்குழு உறுப்பினர்களையுந்தான் குறிப்பிடுகிறேன். அச்சத்தால் அல்ல! அரசியலில் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியத் தால்! வெஞ்சமர் வராத நேரத்திலும் வீரர்களுக்கு பாசறை களில் வேலையுண்டு! வேலின் கூர்மையை மழுங்காமல் பார்ப்பதும்-வாளின் வலிமையை சோதித்துப் பார்ப்பதும்- படையைப் பெருக்குவதும்- இன்னோரன்ன பல! இதே போன்ற கடமைகளில் கழகப் பாசறைகளும் ஈடுபட வேண்டும். பயிற்சி பெறுவதும் - - வீரர் அறப்போர்களில் கலந்துகொள்ள மட்டுமே களின் பட்டியல் பெருகவேண்டு மென்பதல்ல - வேலைகள் பல இருக்கின்றன அவர்களுக்கு. கழகத்தின் பெயரால் நடத்தப்படும் அல்லது கழகத்தின் தலைமை யிலிருந்து அறிவிக்கப்படும் - ஆக்க வேலைகளில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமென்பது மல்ல ; நகரத்து மக் களுக்கு ஏற்படும் அரசியல் கலவாத இடையூறுகளில் பொதுநலத் தொண்டு புரியும் பண்பு, கழக வீரர் களுக்கு ஏற்பட வேண்டும். அத்தகைய படைகள் பட்டினங்களிலும், குக்கிராமங்களிலும் பெருகிடவேண்டும். கழகக் கொள்கைகட்கு குந்தகம் விளையாத முறையிலே- கழக வீரர்களிடத்திலும் - கழகத்திடத்திலும் மக்கட்கு அன்பு வளர்கின்ற அளவிலே - அந்தத் தொண்டு செய் யும் தன்மை தொடர்ந்திட வேண்டும். கூட "மக்களைக் கவர்ந்திட " என்கிற வலை வீச்சாக அத் தகைய தொண்டு இருத்தலாகாது என்பதையும், ம மறந்