பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்கா ங்காவல் 27 - உத்திரவு இல்லாவிட்டால் அவர்களைக் கண்டு கிராம நிலை மைகளை உரைத்திடவும் நமது படை தயாராயிருக்க வேண்டும். தொத்து நோய்களை விரட்ட, துஷ்ட தேவதை களுக்குப் பூஜைபோட சிலர் கிளம்புவர் - அவர்களைப் பழிப்பதுடன் அமர்ந்துவிடக்கூடாது! சுகாதார உத்தி யோகஸ்தர்களின் உதவியுடன் கிராமங்களை சுற்றிச் சுற்றி அலைந்து - சூறை நோயிலிருந்து நமது படை புறப்பட வேண்டும். மக்களைக் காப்பாற்ற - கழகத் தோழர்கள் முயற்சியால் சுகாதார இலாகா வின் வேலைகளால் - நோய் ஓடிவிடும். காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்ற கதைபோல - காளிக்கு பூஜை செய்தோம் காலரா ஒழிந்தது என்பார்கள் அவர்கள். நீங்கள் சீறி விழவேண்டாம் - சிரித்தால் போதும் - நீங்கள் பேச வேண்டியதில்லை. உயிருக்கு மன்றாடி ஊசி போட்டுக் கொண்டபின் பிழைத்துக் கொண்டவன் ருக்கிறானே; அவன் அவர்களிடம் பேசிக்கொள்வான் கையில் கட்டப் பட்ட மஞ்சள் கயிற்றை அவிழ்த்து எறிந்துவிட்டு! - இப்படிப் பல முனையிலும் பணி புரியும் படைவீரர் கள் கிராமாந்திரத் தெருக்களிலே நடைபோட வேண்டும். அப்போதுதான் சுதந்திர திராவிடம் தன்னைத்தான் காப் பாற்றிக்கொள்ளும் வலிமை பெறும். எங்கேயோ என்னையும். உங்களையும் அழைத்துக் கொண்டு போய்விட்டது குளித்தலை. சரி சாப்பிடுவோம்- சாப்பாடு முடிந்தது. திருச்சிக்குப் புறப்பட்டோம். வழக் கம்போல இரண்டு மணியாயிற்று படுக்கையில் விழுவ தற்கு!