________________
ஆறுமாதக் கடுங்காவல் ச 29 சுறுப்புக்கும் குறைவில்லை. அவ்வளவு பொறுப்புடன் காரியங்களை கவனித்துக்கொண்டு - நம்மையும் களிப்புக் கடலில் ஆழ்த்திடும் கருவியாகவும் அமைவார். அவர் கரூர் கூட்டத்திலே இசை மழை பொழிந்தார். பின்னர் நாங்கள் பேசினோம். ஏறத்தாழ முப்பதாயிரம் மக்களுக்கு மேற்பட்ட பெருங் கூட்டம். கரூர் என்றால் கலவர வழக்கு நினைவுக்கு வருவது போலவே - நண்பர் கரிகாலனும் எதிர் வந்து நிற்பார் செயல்வீரர் முருகேசனும் கண்ணில் தோற்றமாவார்-பெரியார் உணவு விடுதி நண்பர்களும் பிரியமுடன் எ திர் வருவர். - இவ்வளவு மெலிந்த நிலையில் - துரும்பான உடம்பை வைத்துக்கொண்டு - இந்தக் கரிகாலன் இப்படிப் பம்பரம் போல் சுற்றி பகுத்தறிவுப் பணி புரிகிறாரே; என்று எண் ணத்தான் தோன்றும். அடக்கம் - தன்னல மறுப்பு-அளவு கடந்த ஆர்வம்- அனைத்திற்கும் எடுத்துக்காட்டு போல அன்பர் முருகேச னார். 27 அவரும் எம்முடன் திருச்சி சிறையில் இருந்தார். ஒரு நாள் மாலை ஒருவர் என்னிடம் அவசரமாக வந்து "சார், காமராஜ நாடார் வருகிறார் சார் ” என்றார். எனக்கு ஆ சரியமாயிருந்தது. ஒரு வேளை ஜெயில் விசிட்டராக வருகி றாரோ என எண்ணினேன். அவ்வளவு அக்கரை அவர் போன்ற பெரிய மனிதர்களுக்கு எப்படி ஏற்படும் என்ற பதிலும் உடனடியாக மனதில் உதயமாயிற்று. எதற்கும் பார்ப்போம் என்று அறையை விட்டு வெளிவந்து பார்த் தேன். காமராஜரைக் காணோம். கரூர் முருகேசனார் வந்து கொண்டிருந்தார். திடீரெனப் பார்க்கும்போது முருகேசன்