________________
ஆறுமாதக் கடுங்காவல் 31 கவே உணர்ந்து செய்திடுதல் சாலச் சிறந்ததாகும். கடை சியில் காருக்குள் நுழைக்கப்பட்டேன். கார் பெருஞ் சப்த முடன் மக்களைப் பயமுறுத்தி- பிறகு நகர்ந்தது. கரூரில் சாப்பிடுவத்ற்கு நேரமில்லாமல் - யாரையும் சந்திக்காமலே திருச்சி நோக்கிப் புறப்பட்டோம். ஒரு அரை மைல் வந்திருப்போம். ஒரு மதில்புறத்தில் இறங்கி இளைப்பாற அமர்ந்தோம். மணி “ஒரு சிகரெட்டா வது பிடிப்போம்” என்று சொல்லியபடி சட்டைப் பையில் கையை விட்டார். “சார் - பர்ஸ் காணாம் சார்" என்றார். வாழ்க்கையில் வறுமைத் தேவியை மணந்துகொண்ட யாரோ ஒரு இந்நாட்டு மன்னன், மணியிடமிருந்த முப்பது ரூபாயைக் கொண்டு ஒருமாத ஜீவியத்தை நடத்தி விடு வான் என்று பேசிக்கொண்டோம். தோழர் முத்து சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு சொல்லாமலிருந்ததை யும் சொல்லிவிட்டார். அவருடைய கால் ஒரு செருப்பை இழந்துவிட்டதாம். அதைச் சொல்லி முடிவதற்குள் அம் பில் அலறினார்; "சார் பேனாவையும் காணாம் சார்!” என்று! எனக்கு சிரிப்பே வந்துவிட்டது. அவர் அடிக்கடி சொல்வார்; "நான் கள்ளன் என்னிடம் யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று! சாதிப் பெருமையால் அல்ல - தமாசுக்காக!'கள்ளரிடமே - ஒரு கள்ளர் கைவரிசையைக் காட்டி விட்டார்' என்று கூறி எல்லோரும் சிரித்தோம். சிரித்துக்கொண்டிருக்க நேரமில்லை. அன்றிரவு திருக்காட் டுப்பள்ளியில் ஒரு நாடகத்திற்கு தலைமை வகிக்க வேண் டும். அது கரூரிலிருந்து சுமார் அறுபது மைல் தூரத்தில் இருக்கிறது.ஆகவே நேராக அங்கு புறப்பட்டோம். இன் னும் சாப்பிடவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது. இரவு 1 மணிக்கு திருக்காட்டுப்பள்ளி போய்ச் சேர்ந்தோம். புல வர் முருகையா குழுவினர் நடித்த நாடகத்திற்கு தலைமை