பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

. ஆறுமாதக் கடுங்காவல் பாதுகாவலர் -ஆச்சாரியார் 45 “சினிமா ஒழிக "> என்று கர்ஜித்தார். ஆத்திரப்பட்டோர் - ஆயாசமடைந்தோர் - தோல்விகண்டோர் - ஆகிய சிலர் அவர் பக்கம் சேர்ந்து கொண்டனர். நல்லதங்காளும் -நள தமயந்தியும் படமாக் கப்பட்ட நாட்கள் ஒழிந்து - வேலைக்காரி - மந்திரி குமாரி - சர்வாதிகாரி -ஓர் இரவு மணமகள் பராசக்தி - நாம் சொர்க்கவாசல் இப்படிப் படங்கள் வருவதைக் கண் டால் பட உலகத்தை ஏகபோக சொத்தாக வைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு எரிச்சல் ஏற்படத்தானே செய் யும்? அதன் காரணமாக தணிக்கை நிலையத்தின் கத்தரிக் கோல் வேகமாக வேலைசெய்ய ஆரம்பித்து விட்டது. தாறுமாறான கத்தரிக்கோல் பிரயோகத்துக்கும் அது தயாராகிவிட்டது. நமது படங்கள் - இல்லை இல்லை... நம் தோழர்கள் எழுதும் படங்கள் - என்றாலே காதையும் கண்ணையும் தீட் டிக்கொண்டு கருத்தை மட்டும் மழுங்க வைத்துக்கொண்டு கத்தரிக்கோல் கைபிடித்தபடி விஜயம் செய்கிறது தணிக்கைக் குழு. பட முதலாளிகள் அநேகமாக தாங்கள் போட்ட பணத்தை திருப்பி எடுக்கவேண்டும் என்ற ஆசையுடை யவர்களாயிருப்பார்களே தவிர - தணிக்கை நிலையத்தை எதிர்த்து வழக்காடும் துணிவு பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் இருந்தாலும் அவர்கள், அவர்கள் ளாகவே இருப்பார்கள். இந்தக் காரணத்தைத் தங்க ளுக்குச் சாதகமாகக்கொண்டு பட முதலாளிகளை முறுத்தி-"அதை வெட்டு இதை வெட்டு -" என்று அலைக்கழித்து எதையாவது வெட்டிக்கொள்! என்னை விட்டால் போதும் " என்று பட முதலாளி சொல்லிவிட்டு 66 பய