பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் இந்த உரையாடலும் உதவாதாம் ! 47 'மாளிகையிலிருந்தபடியே மண் குடிசைகளைத் திரும் பிப் பார்த்தான் சித்தார்த்தன்; மக்களைத் திருத்தும் புத்த னானான் - கலிங்கத்துப் போர்முனையைத் திருப்பிப் பார்த் தான் அசோகன் - கௌதமர் வழிசேர்ந்தான் " இதையும் படத்திலே பரந்தாமன் பேசக்கூடாதாம்! . இந்த உதாரணங்களிலிருந்து என்ன தெரிகிறது? கழகக்காரன் எழுதினால்-ஆட்சேபகரமான கருத்துக் களை மட்டுமல்ல; அழகான எழுத்துக்களையும் வெட்டி எறிய வேண்டும் என்ற முன்னேற்பாடான சதித் திட்டம் சனாதனிகளின் மனதிலே ஊறிவிட்டிருக்கிறது. நாட்டிலே நடமாடும் படங்களையும் - நமது தோழர்கள் எழுதும் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தணிக்கை போர்டாரின் தன்மை நன்கு புரிந்திடும். அந்தத் தன்மையால் 'திரும்பிப்பார்' படம் மூவா யிரம் அடிக்குமேல் கத்தரிக்கோலுக்கு இறையாக்கப்பட் டது. பட முதலாளிகள் வழக்கு போடும் சூழ்நிலையில் இல்லை. எழுத்தாளர்களுக்கோ வழக்குபோட வசதியில்லை. மக்கள் மன்றத்திலே தான் வழ க் கு போடவேண்டும். அங்கே கிடைக்கும் நீதிதான் - நிரந்தரமான தாக சக்தி வாய்ந்ததாக - இருந்திடவும் முடியும். அந்த நினைவோடு- 22ந் தேதி, திரு டி.ஆர்.சுந்தரம் அவர்களை சந்தித்த பிறகு பிற்பகல் 2 மணிக்கு சென்னையை விட்டு அரிய லூர் கூட்டத்திற்குப் புறப்பட்டோம். உளுந்தூர்ப்பேட்டை யிலிருந்து,விருத்தாசலம் சென்று - பாதை தவறியதின்