பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 கருணாநிதி காரணமாக - பல மைல்கள் சுற்றியலைந்து கடைசியில் திருச்சி சாலையைப் பிடித்து இரவு 8 மணிக்கு அரியலூர் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தோம். அரியலூர்: என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு ஊர். அங்கே தான் நான், நாட்டுப்பணி ஆற்றியது குற்றமென்று தீர்ப்பு கூறப்பட்டு ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. 22ந் தேதி 8 மணிக்கு அரியலூரிலே இருபதாயிரம் மக்களுக்கெதிரே மேடையிலே நிற்கும்போது நான் சொன் னேன்;'விரைவிலே நான் கூண்டில் நிற்கவேண்டியிருக்கும் என்று! ஆனால் அரியலூர் நீதிமன்றத்துக் கூண்டிலே நிற்கப்போகிறேன் என்பது அப்போது தெரியாது. அரியலூரிலே பல தோழர்கள் இருக்கிறார்கள், நமது பாசறையில்! அவர்களின் முகம் எனக்கு நன்றாக நினைவி லிருக்கிறது. சிலரின் பெயர் மறந்துவிட்டது. திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் என்ற அந்த சிறப்புப் பெயரை நான் மறந்துவிடவில்லை. என்னுடன் மூன்றுமாத தண்டனை பெற்று சிறையில் எனக்கு உறுதுணையாக இருந்த தோழர் எத்திராஜு அந்த ஊரின் செயலாளர். பண்பு நிறைந்தவர், எந்தக் காரியத்தையும் நிதான் மாகவும்-நேர்த்தியாகவும் செய்யவேண்டுமென்ற உ றுதி படைத்தவர். அரியலூர் செயலாளராக இந்த இளைஞர் கிடைத்திருப்பது அந்த ஊர்த் தோழர்கட்கு ஒரு நல் வாய்ப்புத்தான். கூட்டம் முடிந்து - கழகத்தில் அமர்ந்து தோழர்களுடன் உரையாடி - பின்னர் திருச்சிக்குப் புறப்