________________
ஆறுமாதக் கடுங்காவல் 49 பட்டோம் - இரவு ஒருமணி சுமாருக்கு திருச்சியை அடைந் தோம். நான் திருவாரூர்க்காரன் என்றாலும் பிறந்து வளர்ந்த இடம் திருவாரூருக்குப் பக்கமுள்ள 'திருக்குவளை'என்னும் கிராமம். ஆரம்பப் பள்ளிக்கூடத்திலே படித்துக்கொண் டிருக்கிறேன். 1934-35ம் ஆண்டு என்று நினைக்கிறேன்; எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; ஒரு நடுத்தர வய துள்ளவர் கையிலே காங்கிரஸ் மூவர்ணக் கொடியுடன் தன்னந்தனியாக வருவார். தெருவின் ஒரு மூலையிலே நின்றுகொண்டு "வந்தேமாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே!-போலோ பாரத்மாதாகி- ஜே!" என்ற ஒலிகளை எழுப்புவார். சிறிது சிறிதாகக் கூட்டம் சேர்ந்துவிடும். பிறகு அவர் பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிடுவார். ஊர் மக்கள் எல்லாம் ஆச்சரியப்படுவார்கள். இவ்வளவு அரிய கருத்துக்களைச் சொல்கிறாரே; என்றல்ல! தடங்கல் இல் லாமல், கட கட வென இப்படிப் பேசுகிறாரே என்று தான் அனைவரும் அதிசயிப்பார்கள். ஒரு அரைமணி நேரம் பேசு வார். பிறகு வேறு தெருவுக்குப் போவார். உணவு நேரத் தில் யாருடைய வீட்டிலாவது கிடைத்த ஆகாரத்தை சாப்பிட்டு விட்டு அடுத்த ஊர் போய்விடுவார். அவரை இப்போது மனக் கண்ணால் நினைத்துப்பார்த்தால் ஏறத் தாழ காந்தியாரின் சாயல் உள்ளவராகத் தெரியும். இப் போது அவர் இருக்கிறாரோ இறந்துவிட்டாரோ தெரி யாது. அப்போதே எங்களூரில் பேசிக்கொள்வார்கள் "சுயராஜ்யம் கிடைத்துவிட்டால் இவரைப் போன்றவர் களுக்கு பிரமாதமான புகழும் பெருமையும் கிடைக்கும் என்று! அப்படி யொன்றும் புகழோ பெருமையோ அவ ருக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை. கிடைத்திருந்தால் தேசீயப் பத்திரிகைகளில் அவர் படமாவது வந்திருக்