பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 51 பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார்? இல்லை! சொந்தக்கட்சி மறந்தாலும்கூட, அவரது மாற்றுக்கட்சியாளரின் மன திலே இடம் பெறுகிறவராக ஆகிவிட்டாரா இல்லையா? தொண்டுக்கு சூட்டப்படுகிற உண்மையான புகழ்மாலை துதான்! அவர் போன்றவர்கள் கிராமங்களிலே தோன்றவேண் டும். நமது கழகம் சில ஆண்டுகளாக கிராமாந்திர மக்க ளின் மனதில் குடி புகுந்திருக்கிறது - பிரச்சாரப் படையும், தலைவர்களும் செல்லமுடியாத பட்டி தொட்டிகள் நிறைய இருக்கின்றன.அங்கெல்லாம் என் நெஞ்சை விட்டகலாத தெருப் பிரசங்கிகள் கிளம்பவேண்டும், ஏதென்ஸ் நகரத் திலே சாக்ரடீஸ் எழுந்தது போல! கடைத்தெருவிலே - சந்து முனையிலே நடைபாதை களிலே குளக்கரையிலே சிற்றாறுகளின் ஓரத்திலே- சிங்காரக் கொல்லைகளின் அருகாமையிலே போவோர் வருவாரை நிறுத்திவைத்து நீண்ட பிரசங்கம் செய்வானாம் ஏதென்சுப் பெரியோன் சாக்ரடீஸ்! பயிர் கற்ற பெரியோர் - இளைஞர் - மாணவர் - எத்தனைபேர் வேலைகள் வேண்டாமென பட்டி தொட்டிகளிலே பச்சையைக் கவனித்தபடியும் - ஓய்வு நேரத்தை எப்படிக் கழிப்பது என்று தெரியாதபடியும் இருக்கிறார்கள்! அவர் கள் எல்லாம் தெருப் பிரசங்கிகளாக ஆகலாம். திரா விடத்து மண்ணை தீராத அடிமையிலிருந்து மீட்டிட தீரர் படையைத் திரட்டலாம். ..56 -86 எ 6 குக்கிராமத்து இளைஞர்களே ! விடிந்தது விடிந்தது கோழி கூவுகிறது- என்று ! நீங்களும் கூவுங்களேன் விடுதலை ! விடுதலை!" என்று !