பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 53 எம்மைப் பார்! இன உணர்ச்சியை உற்று நோக்கு! அடங்கு! ஆமையாகு! முடங்கு! ஓடிவிடு! கண்ணை மூடிவிடு!” என்ற எச்சரிக்கை முரசத்தை காது செவிடுபடும் படியாக எசனை என்ற அந்தப் பட்டிக்காடு கொட்டிக் காட்டிற்று; கோணல் புத்திக்காரர்களுக்கு! முகிலைத் தொடும் கொடியை உயர்த்தினர்! முரசுகள் முழங்கினர்! நல்லதோர் நாடகமும் நடத்திக்காட்டினர். எசனை நிகழ்ச்சி முடிந்து நான் - சத்தி - செல்லமுத்து மூவரும் சென்னைக்குப் புறப்பட்டோம். அம்பிலையும், மணியையும் திருச்சிக்கு அனுப்பவேண்டும். வழியிலே ஏதாவது லாரிகள் திருச்சி சென்றால் அதில் ஏற்றிவிடு கிறோம் என்று சொல்லிக்கொண்டே ஐம்பது மைல்கள் கடந்துவந்து அவர்களை உளுந்தூர்ப்பேட்டை புகைவண்டி நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு விடியற்காலை ஐந்து மணிக்கு சென்னை வந்தடைந்தோம். சுற்றுப்பயணத்தின் போழ்து தோழர்கள் உடனிருந் தால் அலுப்பே தெரிவதில்லை. திடீரென வெடிக்கும் வேடிக்கை நிகழ்ச்சிகள் - அதன் விளைவாக எழும் கிண்டல் கள் கேலிகள் - வயிறு வலிக்க சிரிக்கவும் வாய் வலிக்கப் பேசவும் பயன்பட்டு பயணம் உற்சாகம் குறையாமல் அமைந்திட வழியும் ஏற்படும். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் வட ஆற்காடு மாவட்டத்திலே சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. மாவட்ட சார்பில் அமைக்கப்பட்ட வாடகைக்கார் ஒன்றில்,