________________
54 நான் கருணாநிதி - 66 LLLL சத்தி - கண்ணதாசன் - செல்லமுத்து - திராவிடன் பதிப்பகம் கிருஷ்ணன் ஆகியோர் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். எங்களுக்காக அமர்த்தப்பட்ட கார் மிகவும் பழமையானது. என்ற ஒலியுடன் புறப்பட்டதேயானால் மாதம் போம் காத வழி! அதுவும் 'டயர்' பொத்துக்கொள்ளாமல் - எண்ணை அடைத்துக் கொள்ளாமல் என்ஜினுக்கு வலிப்பு நோய் வராமல் இருந்தால்! இந்தக்கார் எத்தனை ஹார்ஸ் பவர்?" என்று கேட்டார் கண்ணதாசன். ஒரே ஹார்ஸ் பவர் தான அதுவும் தென்னாலிராமன் ஹார்ஸ்பவர் என்றேன் நான்! 46 · 66 வயதான காலத்திலும் இப்படித் துன்பப்படுத்து கிறார்களே, என்று பெருமூச்சு விட்டபடி -புகைச்சலைக் கக்கிக்கொண்டு கார் போய்க்கொண்டிருந்தது. வந்தது. வழியிலே ஒரு திருப்பம். எதிர் எதிரே வரும் வண்டி கள் தவறாமல் ஒலி முழங்கினால்தான் பத்திரமாக அந்தத் திருப்பத்தைக் கடந்து செல்லமுடியும். எதிரே ஒரு பஸ் எங்கள் காரும் சென்றது. இரண்டும் பெரிய விபத்துக்குள்ளாகி நொறுங்கிப்போகவேண்டிய பெரிய ஆபத்திலிருந்து ஒரு நூலிழையில் நாங்கள் தப்பித்துக் கொண்டோம். காரணம் எதிரே வந்த பஸ் டிரைவர் "ஹாரன் செய்யாமல் வந்துவிட்டார் - அதனால் வந்த 66 பயங்கரம். அந்த பஸ்ஸில் ஒரு சப் இன்ஸ்பெக்டரும் - சில போலீசாரும் இருக்கிறார்கள். எங்கள் கார் டிரைவர் கோபமாக கீழே இறங்கினார். பஸ் டிரைவரைப் பார்த்தார்.