________________
ஆறுமாதக் கடுங்காவல் "ஏனய்யா ஹாரன் பண்ணாம வரே? நான் வேற பிரேக் இல்லாம வர்ரேன்!” 55 என்று கத்தினார் ஆத்திரமாக! பஸ் போய்விட்டது. எங்களுக்கு சிரிப்பால் ஏற்பட்ட வயிற்றுவலி போகவில்லை. இம்மாதிரி டிரைவர் தமாஷ்' நிறைய நடப்பதுண்டு. திடீரென திருச்சி மாவட்டத்திலிருந்து வட ஆற்காடு மாவட்டத்திற்கு போய்விட்டோமே என்று எண்ணுகிறீர் களா! இரண்டு மாவட்டங்களுக்கும் தொடர்பு இருப்பதால் தான உங்களை அங்கே அழைத்துச் சென்றேன். வட ஆற்காடு மாவட்டத்திலே வாணியம்பாடிக்கு அருகிலேயுள்ள முல்லைக்கொம்பையெனும் தமிழூர் தந்த செல்வம் தோழர் சத்தி, கல்லக்குடி போராட்டத்து முதல் வரிசைப் படைவீரரானார். திருச்சி சுற்றுப்பயணம் முழுதும் என்னுடன் இருந்தார். அவருக்கும், செல்ல முத்துக்கும், சிவப்பிரகாசத்திற்கும், பயணத் திட்டத்தை வகுத்தளித்த மணிக்கும், சிறப்பாக நடத்திட செயலாற் றிய அம்பிலுக்கும், துணைபுரிந்த தோழர் முத்துகிருஷ்ண னுக்கும் டால்மியாபுர போராட்ட செயற்குழுவின் சார்பாக எசனை கூட்டத்திலே நன்றி தெரிவிக்கப்பட்டது. திருச்சியில் நடந்த வெற்றிகரமான பொதுக்கூட்டங் களையும், மக்கள் காட்டிய ஆதரவையும் பொதுச்செய லாளர் அவர்களிடத்திலே தெரிவித்தேன். ஜூலை 15ல் போராட்டத்தைத் துவக்கலாம் என்ற அனுமதியைத் தந்துவிட்டு அண்ணா அவர்கள் விருதுநகர் மாநாட்டிற்கு சென்றுவிட்டார்கள்.