பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 கருணாநிதி தஞ்சை மாவட்டத்திலே வெங்கிடங்கால் என்ற சிறு கிராமம் ஒன்றிருக்கிறது. ஆர்வத்தின் ஊற்று இவர் என்று சுட்டிக் காட்டக்கூடிய ஒரு இளைஞர் - ஆற்றல் மிக்கவர் - கழகத்திற்குக் கிடைத்த சந்தானீம் ஒருவர் கூட்டம் இருக்கிறார் அங்கே. ஜூன் 30ல் அங்கே ஏற்பாடு செய்திருந்தார். நானும், தோழர் S. K. சாமியும் மற்றவர்களும் பேசினோம். நாகை வட்டாரக் கழகத்தின் துவக்கவிழாவும் அங்கு நடைபெற்றது. திருவாரூர்த் தோழர்கள் கருணை ஜமால் உட்பட பலர் வந்திருந்தனர். அந்தக் கூட்டம் அங்கே நடைபெறப் பெருமுயற்சி எடுத்துப் பணியாற்றிய தோழர்களில் ஜமாலும் ஒருவர். புதிதாக கழகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, தொண் டாற்றிடும் நண்பர் ஜமாலைக் காண்போர் அதிசயிப்பர்- "இவருமா இப்படிப் பணிபுரிகிறார்?" என்று கேட்டு "வாழ்க்கை வாழ்வதற்கே!" என்ற வரட்டு தத்துவத்தின் மேல் வசீகரத்திலே மயங்கி - எப்படிப்பட்ட வாழ்க்கையை எப்படி நடத்துவது என்ற அடிப்படையை ஆராயாத "மைனர்'களின் கூட்டம் செல்வக் குடும்பங்களிலே யிருந்து புறப்படுகிற காலம் இது! இந்தக் காலத்திலே ஜமால் போன்றவர்கள் கழகப்பணி ஆற்ற முன் வருவது பாராட்டத்தக்கது! ஏனையோருக்கும் வழிகாட்டக் கூடியது. வெங்கிடங்கால் கூட்டம் முடிந்து சென்னைக்கு சென்றோம். சிதம்பரத்திலே மாநாடு ஜூலை 4, 5, இருநாட் களிலே !