________________
ஆறுமாதக் கடுங்காவல் முரசு முழங்கியது 57 "தில்லையிலே, தீக்ஷிதர் கோட்டையிலே, தீன தயாபரன் கான முழக்கத்துடன் காலைத்தூக்கி காளியிடம் நர்த்த னம் செய்த கைலைப் பதியிலே" என்று பக்தர்கள் வர்ணிப் பர் அந்த க்ஷேத்திரத்தைப்பற்றி. அங்கே நமது மாநாடு! "தீக்ஷிதர் மூவாயிரம்பேர் உண்டு - அவர்களிலே ஒரு வர் எங்கள் ஆடிய பாதர்” என நெஞ்சு நெக்குருகச் சொல்வர் சனாதனச் செல்வர். அங்கே நமது வீரர்கள்! 66 நாளைப் போவார் என்று நாமம் பெற்ற நந்தனுக்கு நந்தி வழிவிட்டதும், செந்தீ பூத உடலைப் பொசுக்கி, புக ழுடலை நிறுத்தி, ஜாதியிலே பறையனையும் ஜோதியிலே கலக்கச்செய்ததும் அத்திருத்தலத்திலே" என்பர் பழமை நண்பர். அங்கே நமது சமத்துவப் பேரொலி! ஆரியாலயம் தில்லையிலே! அங்கே பக்திப் பிரவாகம்! அறிவாலயம் - அதன் எல்லையிலே! அங்கிருந்து பகுத் தறிவு வெள்ளம்! அண்ணாமலை நகரிலே உதயமான புதிய சகாப்தம் - பொன்னான சந்ததி -கண்ணான நமது நாட்டைக் காத்திடும் பண் பாடும் படையினர். D பெருந்தடை கடக்கும் நெடுஞ்செழியன் - பேராசிரி யர் அன்பழகன் - பெருமைமிகு மதியழகன் - வண்ணத் தமிழ்ச் செல்வர் அரங்கண்ணல் - வழக்கறிஞர் இளம் வழுதி - வாலிபத் தென்றல் வலிமைமிகு சொல்லாளர் வில்லாளன் - அனைவரையும் நாட்டுக்களித்த அண்ணாமலை நகர். அத்தகையோர் தோன்றுவதால் ஆரியம் சாகும் எனப் பயந்து எழுந்த பொன்னார் மேனியனின் திருக் கோயில்.