________________
58 கருணாநிதி இரண்டுக்குமுள்ள வேறுபாடு பாரீர் என வேங்கை யெனத் திரண்ட வீரர் கூட்டம். ன் பழமையின் துர்நாற்றம், பக்தியின் பெயரால் பரிமள கந்தமாக்கப்பட்டு - பாழ்பட்டுப் போனதடா தமிழன் வாழ்வு என்பதை வாய்விட்டுக் கதறும் அறிவு இயக்க மாம் - திராவிட முன்னேற்றக் கழகம், அந்தத் தில்லை யிலே மாநாடு கூட்டிற்று. நடனத்திலே சிறந்தவரா நடராஜரும் சிவகாமியும்! அப்படியானால் கோபிநாத்துக்கும் தங்கமணிக்கும் ஒரு கோயில் வேண்டுமே! கேலி கலந்த கேள்வி யெழுந்தது. பூசுரருடன் தன்னையும் சேர்த்துக்கொண்டு பூணூல் அணிந்த பெம்மான், சாதியின் தூதரல்லவோ? என்ற சந்தேகம் வலுப்பெற்றது. பறையன், நெருப்பிலே மூழ்கினால்தான் இறைவனடி சேரலாம் என்னும் நியதி வகுத்தவன் மனுவினும் கொடி யோன் - அக்கால மலான்! அவன் மகேசனல்ல! இப்படி எரிமலை வெடித்தது! ஆண்டவன் பெயரால் ஆலயப் பெருமைகளால் - ஆஷாடபூதிகளை வளரவிட்டு - ஆரியத்தை உச்சாணிக் கொப்பில் ஊஞ்சலாட்டத் திட்டம் போட்டவர்களின் கொட்டமடக்க எட்டுத் திக்கும் பரவியது தி. மு.கழகம். அதன் பட்டுக்கொடி கட்டிப் பறக்கும் கிளைகளில் தில்லை யும் ஒன்று.