________________
ஆறுமாதக் கடுங்காவல் 59 அங்கேதான் சரித்திரத்தின் செப்பேட்டிலே திரா விடர் கொட்டிய பேரிகை செதுக்கப்பட்டது. பால் வடியும் முகமும் - பண்பு நிறை அகமும் - கால் ஓடிய செயல் புரி யும் ஆர்வமும் கொண்ட நண்பர் பாலகுருசாமியை வர வேற்புத் தலைவராய்க்கொண்ட, தென்னாற்காடு மாவட்ட மாநாடு ஜூலை 4, 5, நாட்களிலே தில்லையிலே கூடிற்று. மூன்று பெரும் போர்களுக்கு முரசறையப்பட்டது அங்கே! முன்னணி வீரர்கள் அனைவரும் முழங்கினர். புதுக் கல்வித்திட்ட எதிர்ப்புப் போராட்டத் தலைவர்- பெரியாருக்குப் பெரியாரின் திருச் செல்வர் - பேச்சால் - கருத்தால் - மூச்சால் -நாட்டுக் குழைக்கும் தோழர்- E.V.K.சம்பத், தன் தலைமையிலே நடைபெறப்போகும் ஆச்சாரியார் வீட்டுமுன் மறியல் முறைபற்றியும் - கல்வித் திட்டத்தால் நமது சிறார்களின் கண்கள் எப்படிக் குத்தப் படுகின்றன என்பது பற்றியும் - அவருக்கே உரிய கணீர்க் குரலெடுத்து முரசறைந்தார்! டால்மியாபுரப் போராட்டத் தலைவனாகிய நானும் முரசொலிக்கும் பணி யேற்றேன்! 8 இறுதியில், எல்லாப் போருக்கும் தலைவராகிய - இந்த நாட்டின் செல்வமாகிய - சிந்தை - அணு -ஒவ்வொன்றும் சிலிர்த்திடப் பேசும் செந்தமிழ்க் காவலன் செயல் மன் னன் சிங்க க நடையும், சிங்காரத் தென்றல் நடையும், பொங்கு கடல் நடையும், புரட்சிக் கவி நடையும், புதிய உரை கடையில் கண்ட பூமான் புன்சிரிப்பால் பகை வோட்டி - பூரிப்பால் தம்பிமார் படைமீது விழியோட்டும்-