________________
60 கருணா நிதி கோமான்! திராவிடத்தின் ஒளி விளக்கு தன்மானத் தீபச் சுடர் - தங்கத்துட் தங்கம் - எங்கள் தனித் தங்கம் - அண்ணா பேச எழுந்தார்! ย முரசுகள் ஆயிரம் - பதினாயிரம் - முப்பதினாயிரம்- என்ற தொகையினதாய் ஒலித்தன. 66 "ஒரு தம்பியை ஆச்சாரியார் வீட்டுக்கு முன்னே அனுப்புகிறேன். ஒரு தம்பியை கல்லக்குடி களத்திற்கு அனுப்புகிறேன். களம் ரண்டோடு முடிவதில்லை தோழர்களே ! ஜூலை 15ம் நாள் - கல்லக்குடி களத்திலே கருணாநிதி நிற்கும்போது - அந்தப் போராட்டத்தின் அறிகு யாகவும் தென்னாட்டவரை "நான்சென்ஸ் என்று இகழ்ந்து பேசிய நேருவை கண்டிப்பதற்கு அறிகுறி யாகவும்- தமிழகமெங்கும் உள்ள தமிழர்கள் புகைவண்டி களை நிறுத்தப் போகிறார்கள் என்று அண்ணா சொன்னதுதான் தாமதம் மாநாட்டுப் பந்தலாகவா இருந்தது அது! வேலொடுவேல் உராசியதோ வாளொடு வாள் மோதியதோ எனும் விதத்திலே கையொலியும், அதை மிஞ்சும் நாவொலியும் எழுந்தன! பேனாவை ஒரு போர்வாளாக்கிய அந்த தமிழ்த் தள பதியின் கரம் உயர்ந்தது - நாவோ வீரமுரசம் கொட்டியது- கனல் கிளம்பியது அவர் கண்களில், கனக விசயன் பாதையில் நேரு போகிறார் எனச் சொல்லும்போது! புன லும் எழும்பியது; தமிழரை இழித்திடும் தருக்கரும் உளரோ தரணியில் என்று, அவர் கேட்டபோது!