________________
ஆறுமாதக் கடுங்காவல் 61 தம்பீ ! கருணாநிதி உன் சவ ஊர்வலமா செல்ல வேண்டும் - வேண்டாமடா வேண்டாம் - வெற்றி ஊர்வலமே செல்லட்டும்! சென் றுவா செருமுனைக்கு!' என்று அவர் வாழ்த்தியபோது கண்களிலே களிப்பு பொங்கியது எனக்கு - அதோடு கண்ணீரும் பொங்கியது - ஏன்?- என் அண்ணாவின் அன்புக்கரங்கள் அவ்வளவு பாசத்தோடு என் இருதயத்தைத் தழுவிவிட்டன ; அதனால்! வடநாட்டு மொழி ஆதிக்கத்தை எதிர்க்க இந்தியை எதிர்த்தோம் - 'நான்சென்ஸ்' என்றார் நேரு! பெரிய மனிதர் என எண்ணி ஒரு முறை எச்சரித் 3தாம். திருத்தணிப் போரிலே திராவிட முன்னேற்றக் கழகம் கலந்துகொண்டது. மீண்டும் நேரு சொன்னார் 'நான் சென்ஸ்' என்று! 6 கண்டனத்தைக் காட்ட ரயில் நிறுத்த' மென்றது தமிழகம்! வடநாட்டு வாணிப ஆதிக்கம்-தமிழக த்தில் கூடாது. திராவிடத்திற்காகாது -தமிழர் நாட்டில் தமிழர் பெயர் வைக்கவும் உரிமையில்லையா? டால்மியாபுரத்தை மாற்றி கல்லக்குடியாக்கு என்றோம். கேட்கவில்லை - போர் என்றோம். வளரும் சமுதாயத்தை முளையில் கிள்ள இங்குள்ள வட ஏகாதிபத்தியத்தின் மொத்த வியாபாரி ஆச்சாரி யார் முயன்றார்.