பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 கருணாநிதி அதற்கும் ஒரு போர் என அறிவித்தோம். போர் முனைக்குச் செல்க என்றார் பொதுச்செயலாளர்! எடுத்துச் செல்லவேண்டிய கருவிகளையும் குறிப்பிட்டார். கடமையெனும் வாள் - கண்ணியமெனும் கேடயம் - கட்டுப்பாடெனும் கவசம் மூன்றும் எடுத்துச் செல்க என்றார்; அந்த மூன்றெழுத்துச் செல்வர் அண்ணா! க முரசு அதிர்ந்தது! வடவர் ஆதிக்க அரசு கவிழ்ந் திடுக என முரசு அதிர்ந்தது! திராவிடர் தனி - பயமில்லை இனி - என்ற முரசு அதிர்ந்தது! - முத்தமிழ் படை கெட- முன்னேற்றம் தடைபட - இனி விடோம் ! விடோம் ! என முரசதிர்ந்தது! எதிரிகள் கோடி இட்டழைப்பினும் தொடோம்! தொடோம்! என முரசதிர்ந்தது! ரத்தக் டல்கள் - கொத்தும் இடர்கள் - எதையும் தாங்கும் இத யங் கொண்டோர் -எழுந்தார் எனவே அதிர்ந்தது முரசு! விழுந்தது பகையென கட அதிர்ந்தது முரசு! அதிர்ந்தது முரசு!! அதிர்ந்தது முரசு!!!